மைல்கற்கள்

மைல்கற்கள்

1931

அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை

அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை
1931 ஜுன் மாதம் இலங்கை அரச சபைக்கான (ஒற்றை சட்ட மன்றம்) முதலாவது தேர்தலில், சட்ட மன்றத்திற்கு 50 பேரை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையானது அதன் சுதந்திரத்திற்கு முன்னதாகவும் மற்றும் ஏனைய பல நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உலகளாவிய வாக்களிக்கும் தகுதியினை (வாக்குரிமை) வழங்கி ஆசியாவில் பழைமையான ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது.
1945

இலங்கையில் இலவச கல்விக் கொள்கை

இலங்கையில் இலவச கல்விக் கொள்கை
5 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குக்கு மேற்படாத ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியைப் பெறத் தகுதியுடையது என்பதை தெரிவிக்கும் இலவச கல்விக் கொள்கை 1945 ஒக்டோபர் 1 ஆந் திகதி நடைமுறைக்கு வந்தது. இக் கொள்கை மாணவச் சந்ததிகளுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், உலகளாவிய ஆரம்ப கல்வியின் மில்லேனிய அபிவிருத்தி இலக்கினை எய்துவதற்கு இலங்கைக்கு வழிவகுத்துள்ளது.
1947

அவுஸ்திரேலியாவுடனான இராசதந்திர உறவுகள்

அவுஸ்திரேலியாவுடனான இராசதந்திர உறவுகள்
  1947 மே மாதம் அவுஸ்திரேலியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1948

இலங்கை (சிலோன்) சுதந்திரம் அடைந்தது

இலங்கை (சிலோன்) சுதந்திரம் அடைந்தது
1948 பெப்ரவரி 4 ஆந் திகதி சிலோன் இலங்கை டொமினியன் அந்தஸ்துடைய சுதந்திரத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் பொதுநலவாயத்தினுள் 1972 மே 22 இல் அதன் பிறகு 24 ஆண்டுகளுக்கு டொமினியன் அந்தஸ்து எனும் நிலை தொடர்ந்ததுடன், குடியரசாக மாற்றம் பெறும் வரை இலங்கைக் குடியரசாக மீளப் பெயரிடப்பட்டது.
1948

இந்தியாவுடனான இராசதந்திர உறவுகள்

இந்தியாவுடனான இராசதந்திர உறவுகள்
1948 இல் இந்தியக் குடியரசுடன் இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1948

முதலாவது வெளிநாட்டு தூதரகத்தின் திறப்பு: இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம், புதுடெல்லி, இந்தியா.

முதலாவது வெளிநாட்டு தூதரகத்தின் திறப்பு: இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம், புதுடெல்லி, இந்தியா.
உயர் ஸ்தானிகராலயத்தின் இன்றைய தோற்றம்.
1948

பிரான்சுடனான இராசதந்திர உறவுகள்

பிரான்சுடனான இராசதந்திர உறவுகள்
1948 ஒக்டோபர் 27 ஆந் திகதி பிரான்ஸ் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1948

ஐக்கிய அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள்

ஐக்கிய அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள்
சிலோன் சேர் க்ளெவுட் கொரயா அவர்களை தூதுவராகக் கொண்டு வாஷிங்டன் நகரில் தூதரகம் திறக்கப்பட்டதுடன், 1949 ஒக்டோபர் 29 ஆந் திகதி ஐக்கிய அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.
1948

துருக்கி நாட்டுடனான இராசதந்திர உறவுகள்

துருக்கி நாட்டுடனான இராசதந்திர உறவுகள்
துருக்கி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1948

ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலண்டன் நகரில் இலங்கையின் உயர் ஸ்;தானிகராலயத்தின் திறப்பு

1948

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரில் இலங்கைத் தூதரகத்தின் திறப்பு

1949

அவுஸ்திரேலியாவின் கன்பெரா நகரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு

1949

மியன்மார் நாட்டுடனான இராசதந்திர உறவுகள்

மியன்மார் நாட்டுடனான இராசதந்திர உறவுகள்
மியன்மார் யூனியன் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1949

மியன்மாரின் ரங்கூன் நகரில் இலங்கைத் தூதரகத்தின் திறப்பு

1949

சுவீடன் நாட்டுடனான இராசதந்திர உறவுகள்

சுவீடன் நாட்டுடனான இராசதந்திர உறவுகள்
1970 சுவீடன் இராச்சியத்துடனான இராச தந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1950

வெளிநாட்டலுவல்கள் தொடர்பான கொழும்பு பொதுநலவாய மாநாடு

வெளிநாட்டலுவல்கள் தொடர்பான கொழும்பு பொதுநலவாய மாநாடு
சமூக – பொருளாதார அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்புக்கான பேரவையாக ‘கொழும்பு திட்டம்” (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பொருளாதார அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான கொழும்புத் திட்டம்) கருக்கொண்ட மாநாடாக 1950 ஜனவரி மாதம் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான கொழும்பு பொதுநலவாய மாநாடு இடம்பெற்றது.
1950

இந்தோனேஷியாவுடனான இராசதந்திர உறவுகள்

இந்தோனேஷியாவுடனான இராசதந்திர உறவுகள்
இந்தோனேஷிய குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1950

நோர்வேயுடனான இராசதந்திர உறவுகள்

நோர்வேயுடனான இராசதந்திர உறவுகள்
1950 ஒக்டோபர் நோர்வே இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டது.
1950

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் திறப்பு

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் திறப்பு
1950 பெப்ரவரி 22ஆம் திகதி திறக்கப்பட்ட இஸ்லாமாபாத்திலுள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் தற்போதைய நிலை.
1951

கொழும்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

கொழும்புத் திட்டம் அங்குரார்ப்பணம்
1951 ஜுலை 1 ஆந் திகதி கொழும்புத் திட்டம் அங்குரார்பணம் செய்யப்பட்டது. புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் 1977 இல் அதன் பெயர் ‘ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான கொழும்புத் திட்டம்” ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் அசல் 7 உறுப்பினர்களிலிருந்து அதன் செயற்பாடுகளின் நோக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உறுப்புரிமையை பிரதிபலிப்பதாக இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
1951

இலங்கையில் இலவச சுகாதாரக் கொள்கை

இலங்கையில் இலவச சுகாதாரக் கொள்கை
பிராந்தியத்திலும், உலகின் பல பாகங்களிலும் உயர் சமூக அபிவிருத்தி சுட்டிகளை அடைந்து கொள்வதற்கு இலங்கைக்கு வழியமைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளின் பொதுச்சுகாதார தாதியர்கள் மற்றும் சுகாதார கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கலாக அடிப்படை மட்ட வேலையாட்களை கொண்ட முறைமையான இலவச சுகாதாரக் கொள்கையைப் பின்பற்றல்.
1952

இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் இலங்கை தூதரகத்தின் திறப்பு

1952

ஜப்பானுடனான இராசதந்திர உறவுகள்

ஜப்பானுடனான இராசதந்திர உறவுகள்
ஜப்பானுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1952

இத்தாலியுடனான இராசதந்திர உறவுகள்

இத்தாலியுடனான இராசதந்திர உறவுகள்
இத்தாலியுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1952

இத்தாலி ரோம் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1953

பெல்ஜியத்துடனான இராசதந்திர உறவுகள்

பெல்ஜியத்துடனான இராசதந்திர உறவுகள்
பெல்ஜியம் இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1953

ஜேர்மனியுடனான இராசதந்திர உறவுகள்

ஜேர்மனியுடனான இராசதந்திர உறவுகள்
1953 டிசம்பர் 9 ஆந் திகதி ஜேர்மனி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1953

ஜப்பான், டோக்கியோவில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1954

கொழும்பு பவர்ஸ் மாநாடு

இலங்கையினால் 1954 ஏப்ரல் 28 முதல் மே 2 ஆந் திகதி வரை கொழும்பு பவர்ஸ் மாநாடு நடாத்தப்பட்டது. இது ஆசிய – ஆபிரிக்க ஒருமைப்பாட்டுக்கான உந்துதலை அளிக்கும் வகையிலும், 1955 பண்டுங் மாநாட்டிற்கு வழிகோலும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டது.
1955

பண்டுங் மாநாடு

பண்டுங் மாநாடு
இலங்கையுடன் (முன்னர் சிலோன்) சேர்ந்து ஆசியா மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 நாடுகள் ஆபிரிக்க – ஆசிய ஒற்றுமை குறித்து கலந்துரையாடல் மற்றும் அணிசேரா இயக்கத்திற்கான அடித்தளத்தை நிலைநாட்டுவதற்காக 1955 ஏப்ரல் மாதம் இந்தோனேஷியாவின் பண்டுங் நகரில் ஒன்றுகூடின.
1955

ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணைந்து கொண்டது

ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணைந்து கொண்டது
இலங்கை, அப்போதைய சிலோன் மற்றைய ஒன்பது நாடுகளுடன் சேர்ந்து 1955 டிசம்பர் 14 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முதலாவது ஐ.நா வுக்கான நிரந்தர பிரதிநிதி சேர் செனரத் குணவர்தன நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.
1955

தாய்லாந்துடனான இராசதந்திர உறவுகள்

தாய்லாந்துடனான இராசதந்திர உறவுகள்
1955 நவம்பர் மாதம் தாய்லாந்து இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.
1956

இஸ்ரேலுடனான இராசதந்திர உறவுகள்

இஸ்ரேலுடனான இராசதந்திர உறவுகள்
1956 ஜுன் மாதம் 1 ஆந் திகதி இஸ்ரேலுடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.
1956

ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இலங்கையின் பிரதிநிதிக்கான தூதரக பதவியளிப்பு.

ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இலங்கையின் பிரதிநிதிக்கான தூதரக பதவியளிப்பு.
1953 இல் ஐக்கிய அமெரிக்காவுக்கான தூதுவராக சேர் செனரத் குணவர்தன நியமிக்கப்பட்டதுடன், 1955  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் அரசாங்கத்தின் கண்காணிப்பாளராக சேவையாற்றினார். 1956 இல் ஐக்கிய நாடுகளுக்கான முதலாவது பிரதிநிதியாக நியமனங்களை வழங்கினார்.
1956

பிரான்ஸ், பரிஸ் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1956

ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிலோன் அரசத் தலைவரினால் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிலோன் அரசத் தலைவரினால் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கையின் முதலாவது அரசத் தலைவராக அப்போதைய பிரதமராகவிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க திகழ்கிறார். 11 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ‘எனது நாடு மிகச்சிறியது, பலவீனமானதும், வறுமையானதுமான ஒரு நாடாகும். ஆனால், இன்று நான் துணிகரமாகச் சிந்திக்கையில், குறிப்பாக இத்தகைய அமைப்பினுள் ஒரு நாட்டினாலும், அதன் உறுப்பினரினாலும் வழங்கப்படக்கூடிய சேவையானது அந் நாட்டின் அளவிலோ, அதன் சனத்தொகையிலோ, அதன் அதிகாரத்திலோ..Read More
1957

சீனாவுடனான இராசதந்திர உறவுகள்

சீனாவுடனான இராசதந்திர உறவுகள்
  1957 பெப்ரவரி 7ஆந் திகதி சீனாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1957

சீனாவின் பீஜிங் நகரில் இலங்கைத் தூதரகத்தின் திறப்பு

1957

நேபாளத்துடனான இராசதந்திர உறவுகள்

நேபாளத்துடனான இராசதந்திர உறவுகள்
1957 ஜுலை 1ஆந் திகதி நேபாள இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன. (நேபாளமானது 2017 ஜுன் மாதம் கூட்டாட்சி ஜனநாயக குடியரசாக மாறியது)
1957

இந்தியாவின் சென்னையில் இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராலயம் திறக்கப்பட்டது.

1957

மலேசியாவுடனான இராசதந்திர உறவுகள்

மலேசியாவுடனான இராசதந்திர உறவுகள்
மலேசியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1957

மலேசியாவின் கோலாலம்பூரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறக்கப்பட்டது

1957

எகிப்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

எகிப்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
எகிப்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1957

சோவியத் ஒன்றியத்துடனான இராசதந்திர உறவுகள்

சோவியத் ஒன்றியத்துடனான இராசதந்திர உறவுகள்
1957 பெப்ரவரி 19ஆந் திகதி சோவியத் ஒன்றியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1957

ரஷ்யா, மொஸ்கோவில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1958

கனடாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

கனடாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1958

கனடா, ஒட்டாவாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு

கனடா, ஒட்டாவாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு
1958

எகிப்து, கைரோவில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1958

ஜேர்மனி, பொன் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1959

கியூபாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

கியூபாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
கியூபாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1960

உலகின் முதலாவது பெண் பிரதமர்

உலகின் முதலாவது பெண் பிரதமர்
1960 ஜுலை 21 ஆந் திகதி உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 26 ஆவது அமர்வில் அவர் உரையாற்றினார்.
1960

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினராக இலங்கை(சிலோன்) உருவானது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினராக இலங்கை(சிலோன்) உருவானது
1960 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினராக சிலோன் தெரிவு செய்யப்பட்டது. சிலோனிலிருந்து சேர் க்ளெடி கொரயா அவர்கள் 1960 மே மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின முதலாவது தலைவரானார்.
1960

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை (சிலோன்) முதல்முறையாக பங்குபற்றியது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை (சிலோன்) முதல்முறையாக பங்குபற்றியது.
கொங்கோ ஜனநாயக குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு ஆறு அமைதிகாப்பாளர்களை ஈடுபடுத்தியதனூடாக 1960 இல் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் நடவடிக்கைக்கு இலங்கை அதன் முதலாவது பங்களிப்பை வழங்கியது.
1961

ஈரானுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

ஈரானுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
ஈரானுடனான இராசதந்திர உறவுகள்
1961

பிலிப்பைன்ஸ் உடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

பிலிப்பைன்ஸ் உடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
பிலிப்பைன்ஸ் உடனான இராசதந்திர உறவுகள்
1961

பிலிப்பைன்ஸ், மனிலா நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1962

ஐரோப்பிய ஆணைக்குழுவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

ஐரோப்பிய ஆணைக்குழுவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
ஐரோப்பிய ஆணைக்குழுவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1965

மாலைதீவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

மாலைதீவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1956 ஜுலை 26 ஆந் திகதி மாலைதீவு குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1965

சுவிட்சலாந்து, ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரத் தூதரகம் திறப்பு

1966

தாய்லாந்து, பாங்கொக் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1967

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் யூ தான்ட் அவர்களின் இலங்கைக்கான விஜயம்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் யூ தான்ட் அவர்களின் இலங்கைக்கான விஜயம்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் யூ தான்ட் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது 1967 ஏப்ரல் 10 ஆந் திகதி கொழும்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கட்டிடம் திறக்கப்பட்டது.
1968

1968 நவம்பர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இணைத்தூதரகம் திறக்கப்பட்டது.

1970

சிங்கப்பூருடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

சிங்கப்பூருடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1970 ஜுலை 27 ஆந் திகதி சிங்கப்பூர் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1970

சுவீடன், ஸ்டொக்ஹோம் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1970

கென்யாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

கென்யாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
கென்யாவுடனான இராசதந்திர உறவுகள்
1970

கென்யா, நைரோபியில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஸ்தாபிப்பு

1971

குவைத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

குவைத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1971 பெப்ரவரி 19 ஆந் திகதி குவைத்துடனான இராசதந்திர உறவுகள்
1971

சிங்கப்பூரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு

1972

பங்களாதேஷ{டனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

பங்களாதேஷ{டனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1972

எத்தியோப்பியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

எத்தியோப்பியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
எத்தியோப்பியா ஜனநாயக கூட்டாட்சி குடியரசுடனான இராசதந்திர உறவுகள்
1973

1973 ஜுலை ப்ரெசில்ஸ் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1974

சமுத்திர சட்ட மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கியது

சமுத்திர சட்ட மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கியது
சமுத்திரங்களின் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 3 ஆவது மாநாட்டின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த ஹெமில்டன் ஷெர்லி அமரசிங்க நியமிக்கப்பட்டார். இந்த மாநாடானது, உலக சமுத்திரங்களைப் பயன்படுத்தும் தேசங்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை தீர்மானிக்கும் முக்கிய ஆவணமான சமுத்திர சட்ட சாசனத்தை ஏற்படுத்த வழிவகுத்தது.
1975

பலஸ்தீனுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

பலஸ்தீனுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
பலஸ்தீனுடனான இராசதந்திர உறவுகள்
1976

கட்டார் நாட்டுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

கட்டார் நாட்டுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
கட்டார் நாட்டுடனான இராசதந்திர உறவுகள்
1976

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கான இலங்கையைச் சேரந்த முதலாவது தலைவர்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கான இலங்கையைச் சேரந்த முதலாவது தலைவர்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 31 ஆவது அமர்வில் இலங்கையின் முதலாவது தலைவராக 1976 ஆம் ஆண்டு எச்.ஷேர்லி அமரசிங்க நியமிக்கப்பட்டார்.
1976

5 ஆவது NAM மாநாட்டினை இலங்கை நடாத்தியது.

5 ஆவது NAM மாநாட்டினை இலங்கை நடாத்தியது.
1976

NAM உச்சி மாநாடு இடம்பெற்றது

NAM உச்சி மாநாடு இடம்பெற்றது
1977

கொரியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

கொரியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1977 நவம்பர் மாதம் 14 ஆந் திகதி கொரியக் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு.
1978

ஆயுத களைவுக்கான இலங்கை

ஆயுத களைவுக்கான இலங்கை
அணு ஆயுதங்கள், சிறிய ஆயுதங்கள் மற்றும் புறநிலை ஆயுதச் சண்டைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஆயுத களைவு தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின் விசேட அமர்வினை முதல் முறையாக இலங்கை முன்மொழிந்தது.
1979

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1979 ஜுன் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1979

பங்களாதேஷ் டாக்கா நகரில் ஜுன் மாதம் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறக்கப்பட்டது.

1979

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இலங்கைத் தூதரகம் திறக்கப்பட்டது.

1980

மாலைதீவு மாலேயில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1981

ஓமான் நாட்டுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

ஓமான் நாட்டுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
ஓமான் நாட்டுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1981

சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1982

இலங்கையில் யுனெஸ்கோவின் முதலாவது உலக பாரம்பரியத் தளங்கள்

இலங்கையில் யுனெஸ்கோவின் முதலாவது உலக பாரம்பரியத் தளங்கள்
பாரம்பரிய நகரமான பொலன்னறுவை, பாரம்பரியமிக்க சிகீரியா நகரம் மற்றும் புனித நகரான அனுராதபுரம் போன்ற இலங்கையின் மூன்று கலாச்சாரத் தளங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன. இன்று, தம்புள்ளை தங்க விகாரை(1991), காலியின் பழைய நகரம் மற்றும் அதன் வலுவூட்டல்கள்(1988) மற்றும் புனித கண்டி நகரம் (2010) ஆகியவையும், இலங்கையின் மத்திய மலைநாடுகள்(2010) மற்றும் சிங்கராஜா வனவளம்(1988) ஆகிய 2 இயற்கைத் தளங்கள் உள்ளடங்கலாக 6 கலாச்சாரத் தளங்கள்..Read More
1982

குவைத்தில் இலங்கைத் தூதுரகம் திறப்பு

1983

இந்தியா, மும்பையில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு

1985

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) ஸ்தாபிக்கப்பட்டது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) ஸ்தாபிக்கப்பட்டது.
1985 டிசம்பர் 8ஆந் திகதி டாக்கா நகரில் SAARC பட்டயமானது 7 உறுப்பினர்களுடன் கைச்சாத்திடப்பட்டதுடன், இதனூடாக பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை காணப்படுகிறது.
1987

கியூபா, ஹவானாவில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1987

கொரியா, சோல் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1987

ஓமான், மஸ்கட் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1990

ஈரான், டெஹரன் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1992

நெதர்லாந்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

நெதர்லாந்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1992 நவம்பர் மாதம் நெதர்லாந்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1993

நோபாளம், காத்மண்டுவில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1993

நெதர்லாந்தின் ஹாக்கில் இலங்கைத் தூதரகம் திறப்பு

1993

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் கொன்சூலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு

1995

ஒஸ்ரியாவின் வியன்னாவில் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரத் தூதரகமும், இலங்கைத் தூதரகமும் திறப்பு

1996

தென்னாபிரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

தென்னாபிரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
தென்னாபிரிக்க குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1996

ஜோர்தான், அம்மான் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு

Close