தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு

தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு

  • ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஏழு தெற்காசிய நாடுகளுடனான இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகள் தொடர்பான விடயங்களை தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு கையாள்கின்றது.
  • பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் பணியுடன் இந்தப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் உயர் மட்ட அரசியல் ஈடுபாடுகளுக்கான உள்ளீடுகளை வழங்குகின்றது.
  • அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூகத் துறைகளில் இந்த நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இது வழிநடாத்துகின்றது. இருதரப்பு மற்றும் பிராந்திய ஈடுபாடுகளின் மூலமாக தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அபிவிருத்தி உதவி, முதலீட்டு உறவுகள், சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாடுகள் ஆகியவற்றை மேற்கொள்வது இந்தப் பிரிவின் பொறுப்புக்களின் ஒரு பகுதியாகும்.
  • ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய 6 தெற்காசிய நாடுகளில் வதிவிடத் தூதரகங்களை இலங்கை பேணி வரும் அதே நேரத்தில் சென்னையில் ஒரு பிரதி உயர் ஸ்தானிகராலயத்தையும், மும்பை மற்றும் கராச்சியில் இரண்டு உதவித் தூதரகங்களையும் கொண்டுள்ளது.
  • எட்டு உறுப்பினர்களைக் கொண்ட பிராந்திய அமைப்பான பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) தொடர்பான விடயங்களையும் இந்த தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு கையாள்கின்றது.
  • சார்க் அமைப்பின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப சார்க் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ளவும் இலங்கையின் அமைச்சுக்கள் / திணைக்களங்கள் / நிறுவனங்களுக்கு உதவுவதில் இந்தப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • இலங்கை அதிகாரிகள் மற்றும் சார்க் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கான சார்க் வீசாக்கள் மற்றும் ஏனைய வகையான நபர்களுக்கான வீசாக்களையும் இது கையாளுகின்றது

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

பணிப்பாளர் நாயகம்

பெயர்: திருமதி. அருணி ரணராஜ
தொலைபேசி: +94 112 325 925
தொலைநகல்: +94 115 339 521
மின்னஞ்சல்: dgsa(at)mfa.gov.lk

பதில் பணிப்பாளர்

பெயர்: திரு. கே.எம்.ஆர். பெரேரா
தொலைபேசி:
தொலைநகல்: +94 115 339 521
மின்னஞ்சல்: ransiri.perera(at)mfa.gov.lk

பிரதிப் பணிப்பாளர்

பெயர்: திருமதி. வத்சலா அமரசிங்க
தொலைபேசி: +94 115 668 671
மின்னஞ்சல்: wathsala.amarasinghe(at)mfa.gov.lk

கிளைத் தலைவர்

பெயர்: திருமதி. தில்ஹாரா ரணவீர
தொலைபேசி: +94 112 436 323
தொலைநகல்: +94 115 339 521
மின்னஞ்சல்: saarc(at)mfa.gov.lk sa(at)mfa.gov.lk

பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பட்ட உதவியாளர்

பெயர்: திருமதி. ரஜிந்திர விஜேநாயக்க
தொலைபேசி: +94 112 325 925
மின்னஞ்சல்: dgsaarc(at)mfa.gov.lk

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பெயர்: திரு. ஜே.டப்ளிவ். கிரிஷாந்த
தொலைபேசி: +94 117 445627
மின்னஞ்சல்: saarc(at)mfa.gov.lk

Close
Zoom