உள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள்

உள்ளகக் கணக்காய்வு மற்றும் விசாரணைகள் பிரிவு

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

உள்ளகக் கட்டுப்பாடு மற்றும் கூட்டாண்மை ஆட்சி போன்றவற்றின் செயற்திறனை மேம்படுத்துவதற்கும், அவற்றை மதிப்பீடு செய்வதற்குமான ஒரு முறையான மற்றும் ஒழுக்கமான கணக்காய்வு அணுகுமுறையை அமைச்சிக்கு வழங்குவதே உள்ளக கணக்காய்வு மற்றும் விசாரணைகள் பிரிவின் குறிக்கோளாகும்.

இந்தப் பிரிவின் முக்கிய நடவடிக்கைகள்:

  1. அமைச்சின் நிதி மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு அமைப்புக்களின் திறன் மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்தலும் செயல்படுத்துகைக்கான பரிந்துரைகள் செய்தலும் ;
  2. ஏற்கனவே உள்ள கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கட்டளைகள் போன்றவற்றின் இணக்கத்தன்மையின் நிலைகளை ஆய்வு செய்தல்;
  3. அமைச்சின் செயற்பாடுகள் அனைத்தும் கவனமாக, வினைத்திறனாக மற்றும் விளைதிறனாக செயற்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துதல்;
  4. அமைச்சின் சொத்துக்கள் மற்றும் நலன்கள் போன்ற அனைத்தும் மோசடி மற்றும் இழப்புக்கள் இன்றி பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்துதல்;
  5. உள்ளக கட்டுப்பாட்டு முறைமையில் ஏற்படும் விடயங்களுக்கு வழிகாட்டல் மற்றும் பரிந்துரைகள் வழங்கல் ;
  6. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் உள்ளகக் கணக்காய்வினை மேற்கொள்ளுதல்; மற்றும்
  7. தேவையேற்படுமிடத்து விசாரணைகளை முன்னெடுத்தல்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

தலைமை உள்ளகக் கணக்காய்வாளர்

பெயர்: திரு. ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க
தொலைபேசி: +94 11 2 445 827
தொலைநகல்: +94 112 334 319
மின்னஞ்சல்: cia@mfa.gov.lk

கிளைத் தலைவர்

பெயர்: 
தொலைபேசி: +94 112 334 319
மின்னஞ்சல்: auditin@mfa.gov.lk

Close