Guidelines for foreign media

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைய, இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தேவைக்கேற்ப வசதிகளை வழங்குதல் / ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு பணிபுரிகின்றது:

வீசா:

ஊடக நோக்கங்களுக்காக அனைத்து ஊடகங்களும் இலங்கைக்கு சுதந்திரமாக விஜயம் செய்ய முடிவதுடன், கொழும்புக்கு வருகை தருவதற்கு முன்னர் அண்மையலிருக்கும் இலங்கைத் தூதரகம் / உயர் ஸ்தானிகராலயம் / உதவித் தூதரகத்திலிருந்து ஊடகவியலாளர் வீசாவிற்கான விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.  வீசாவிற்கு எந்தவித முன் அனுமதியும் தேவையில்லை. (இது தொடர்பாக, 2015 ஜனவரி 15ஆந் திகதிய அமைச்சின் சுற்றறிக்கை 10 க்கு இலங்கைத் தூதரகங்கள்  வழிநடத்தப்படும்). தயவுசெய்து கவனிக்கவும்: செய்தி, மனித நலன் சார்ந்த செய்திகள், தலையங்கங்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் செய்தி ஊடகம் / அச்சு ஊடகங்களின் பத்திரிகையாளர்களுக்கு இது பொருந்தும். (தயவுசெய்து கீழேயுள்ள பகுதியைப் பார்க்கவும் – ‘செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள்‘)

திரை ஆவணப்படங்கள் / திரைப்படங்களை மேற்கொள்ளும் ஊடகங்கள், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்தல் வேண்டும் – தயவுசெய்து ‘ஆவணப்படங்கள் / சிறப்புத் திரைப்படங்களை படமாக்குதல்’ க்கான கீழேயுள்ள பகுதியைப் பார்க்கவும்.

ஊடக அங்கீகாரம்:

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் வழங்கப்பட்ட பரிந்துரையின் பேரில் அரசாங்க தகவல் திணைக்களத்திடமிருந்து ஊடக அங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும். வருகை தரும் அனைத்து ஊடகங்களும் நாட்டிற்கு வந்தவுடன் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கொழும்பிலுள்ள வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொது தகவல் தொடர்பாடல் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். ஒரு தற்காலிக ஊடக நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ஊடக அங்கீகாரப் படிவம்: வருகை தரும் ஊடகவியலாளர் உடன் பரிந்துரைக் கடிதத்தை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். 

ஊடக அங்கீகாரப் படிவத்தை பின்வருவனவற்றில் பதிவிறக்கம் செய்யலாம்: –   https://www.news.lk/images/pdf/2017/nov/PRESS_ACCREDITATION_FORM_VISITING_JOURNALIST_2018.pdf

https://www.news.lk/images/pdf/2017/nov/PRESS_ACCREDITATION_FORM_VISITING_JOURNALIST_2018.pdf . படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்: – PDF பிரதி

உபகரணங்களுக்கான அனுமதி:

ஊடகவியலாளர்ளால் எடுத்துச் செல்லப்படும் உபகரணங்களை அகற்றுவது தொடர்பான விதிமுறைகளை சுங்கத் திணைக்களத்தினால் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றது. அந்த வகையில், வருகை தரும் ஊடகவியலாளர்கள் சுங்க அனுமதிக்காக கொண்டு செல்லும் எந்தவொரு சாதனத்திற்கும் ‘கார்னெட்’ எனப்படும் தற்காலிக இறக்குமதி ஆவணத்தை வைத்திருத்தல் வேண்டும். ‘கார்னெட்’ இல்லாத நிலையில், பொருட்களின் மதிப்புக்கு வங்கி உத்தரவாதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். எந்தவொரு அரச நிறுவனமும் இந்த விஜயத்திற்கு நிதியுதவி செய்தால், உபகரணங்களை மீண்டும் கொண்டு செல்வதனை உறுதி செய்யும் உத்தரவாதக் கடிதம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படுதல் அவசியமாகும்.

சுங்கத் திணைக்களத்தினர்; விமான நிலையத்தில் வைத்து அனுமதியளிப்பதற்காக, ஊடகவியலாளர்கள் கொண்டு செல்லும் உபகரணங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகத்தின் மூலம் முன்கூட்டியே வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொது தகவல் தொடர்பாடல் பிரிவுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். ஊடகவியலாளர்கள் வெளியேறியதும், அந்த உபகரணங்கள் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் என சம்பந்தப்பட்ட ஊடக அமைப்பின் கடிதத்துடன் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் / இராஜதந்திரப் பிரதிநிதிகள் / உத்தியோகபூர்வ ஊடகங்கள் / அரசாங்க உதவிப் பாதுகாப்பு மதிப்பாய்வு:

சர்வதேச செய்தி ஊடக நிறுவனங்கள் / ஊடகங்கள் மற்றும் மேலே சுட்டிக்காட்டப்பட்டவற்றிலிருந்து வரும் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான ஊடகக் குழுக்கள் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்தத் தேவைகளிலிருந்து விதிவிலக்களிக்கப்படுவதுடன், வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகங்களினால் ஊடகவியலாளர் வீசாக்கள் வழங்கப்படலாம்.

தயவுசெய்து அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் தொடர்பு கொள்ளவும்.

ஆவணப்படங்கள் / சிறப்பம்சத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள்:

சுற்றுலா விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் வனவிலங்கு தொடர்பான ஆவணப்படங்கள் தவிர ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களைப் படமாக்குவதற்கு இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன் அனுமதி அவசியமாகும். 

ஆகையால், வெளிநாடுகளிலுள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களிலும் கிடைக்கக்கூடிய தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன ஒப்பந்தத்தை பூர்த்தி செய்து, அதனை ஆவணப்படம் / சிறப்பம்சத் திரைப்படத்தின் சுருக்கம், இலங்கையில் இருக்கும்போது ஊடகக் குழுவின் பயணம் மற்றும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் தொடர்பான தகவல்களுடன் திட்டமிடப்பட்ட கால அட்டவணையின் ஆரம்பத்திற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஊடகக் குழுக்கள் கோரப்படுகின்றன. 

மேலதிக விவரங்களை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்:  http://www.nfc.gov.lk/foreign-shootings.php http://www.nfc.gov.lk/foreign-shootings.php

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன ஒப்பந்தம் (Pனுகு ஆவணம்) – ‘வெளிநாட்டினரால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் படப்பிடிப்புக்கான பொதுவான வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்பம்’ (2018 திருத்தப்பட்ட ஆவணம்) ஐ பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்: 

“http://www.mfa.gov.lk/wp-content/uploads/2017/11/General-Guidelines-Foreign-Shooting-2019-DEC-NFC.pdf”

http://www.mfa.gov.lk/wp-content/uploads/2017/11/General-Guidelines-Foreign-Shooting-2019-DEC-NFC.pdf

சுற்றுலா விளம்பர ஆவணப்படங்களை படமாக்குதல்:

சுற்றுலா ஊக்குவிப்பு ஆவணப்படங்களை படமாக்குவதற்கு அல்லது இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பழக்கப்படுத்துதல் சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதற்கு, வெளிநாடுகளிலுள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களிலும் கிடைக்கக்கூடிய ‘இலங்கைத் தூதரகங்களுக்கான ஊடகவியலாளர்கள் / தொலைக்காட்சிக் குழுவினருக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தெரிவு அளவுகோல்’ படிவத்தை பூர்த்தி செய்தல் வேண்டும்.

சம்பந்தப்பட்டய ஆவணங்களை செயலாக்கம் செய்வதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்கு, திட்டமிடப்பட்ட கால அட்டவணையின் ஆரம்பத்திற்கு முன்னர் குறைந்தது 30 வேலை நாட்கள் தேவைப்படுகின்றது. இத்தகைய ஊடகக் குழுக்கள் இலங்கையில் தமது திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான உள்நாட்டுக் குழுவொன்றையும் கொண்டிருத்தல் வேண்டும்

வனவிலங்குகள் பாதுகாப்புப் பகுதிகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளுதல்:

வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகளில் படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்கு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். அனைத்து இலங்கைத் தூதரகங்களிலும் கிடைக்கக்கூடிய முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ‘வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகளில் படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்கான விண்ணப்பம்’ ஐ சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைத்தல் வேண்டும். சம்பந்தப்பட்டய ஆவணங்களை செயலாக்கம் செய்வதற்காக இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு, திட்டமிடப்பட்ட கால அட்டவணையின் ஆரம்பத்திற்கு முன்னர் குறைந்தது இரண்டு வாரங்கள் தேவைப்படுகின்றது.

மேலதிக தகவல்:

இலங்கைக்கு ஊடகவியலாளர்கள் விஜயம் செய்வது குறித்த மேலதிக தகவல்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொது தகவல் தொடர்பாடல் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி: +94 112 473 944, +94 112 437 633, +94 112 473 946

மின்னஞ்சல்:  dgpc@mfa.gov.lk dgpc@mfa.gov.lk மற்றும்  publicity@mfa.gov.lk publicity@mfa.gov.lk

 

Close