இலங்கை பற்றி

 

ஆண்டுகளுக்கு மேலான பதிவு ரீதியான வரலாற்றைக் கொண்டுள்ளது. பௌத்த மதத்தால் தாக்கம் பெற்ற உயரிய கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட பல இன, பல மத நாடான இலங்கை, ஏராளமான இயற்கை அழகு நிறைந்த இடமாக விளங்குகின்றது. 

சுற்றுலாத் தலமான இலங்கை, பிரயாணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் இயற்கைக் காட்சிகள், அழகிய கடற்கரைகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை கவர்ந்திழுக்கும் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான கலவையை வழங்குகின்றது. 65,610 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான எட்டு (8) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள், பெருமளவில் அழகிய கடற்கரையையுடைய 1,330 கிலோமீட்டர் கடற்கரை, ஏராளமான வனவிலங்குகளைக் கொண்டுள்ள 15 தேசிய பூங்காக்கள், கிட்டத்தட்ட 500,000 ஏக்கர் கொண்ட பசுமையான தேயிலைத் தோட்டங்கள், 250 ஏக்கர் தாவரவியல் தோட்டங்கள், 350 நீர்வீழ்ச்சிகள் மற்றும் 25,000 நீர்நிலைகளை இலங்கை கொண்டுள்ளது. 

இந்து சமுத்திரத்தின் முத்து என குறிப்பிடப்படும் இலங்கைத் தீவு, அதன் நீண்ட வரலாற்றில் வெவ்வேறு கட்டங்களில் செரெண்டிப், தப்ரோபேன் மற்றும் இலங்கை என அழைக்கப்பட்டது.

இலங்கையின் தேசியக் கொடி

1948 பெப்ரவரி 04ஆந் திகதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தேசியக் கொடியொன்றின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. 1815 இல் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் சிங்கக் கொடி தேசியக் கொடியாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை மட்டக்களப்புக்கான பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஏ. சின்னலெப்பை 1948 ஜனவரி 16 ஆந் திகதி அரச பேரவையில் தாக்கல் செய்தார். இந்த விடயம் விவாதிக்கப்பட்டு, பின்னர் கௌரவ பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க அவர்களினால் திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க (தலைவர்), சேர் ஜோன் கொத்தலாவல, திரு. ஜே.ஆர். ஜயவர்தன, திரு. டி.பி. ஜாயா, டொக்டர் எல்.ஏ. ராஜபக்ஷ, திரு ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் செனட்டர் எஸ். நடேசன் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை நியமித்தார்.

தேசியக் கொடியை உருவாக்குவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும், 1948 பெப்ரவரி 04 ஆந் திகதி முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இருப்பினும், அன்று சிங்கக் கொடி பறந்தது. 1948 பெப்ரவரி 19ஆந் திகதி சுதந்திர இலங்கையின் (பின்னர் இலங்கை) முதலாவது பாராளுமன்றம் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கக் கொடி மற்றும் பிரிட்டிஷ் யூனியன் ஜெக் ஆகியன பறந்தன. 1948 பெப்ரவரி 12 ஆந் திகதி கண்டியில் நடைபெற்ற சுதந்திர கொண்டாட்டத்தின் போது பிரதமர் டி.எஸ். சேநாயக்க ஒக்டகனில் (பட்டிரிப்புவ) சிங்கக் கொடியை அவிழ்த்தார்.

சிறப்புக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட தேசியக் கொடி திரு. டி.எஸ். சேனநாயக்க அவர்களால் 1951 மார்ச் 02ஆந் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் இரண்டு கோடுகள் இருந்ததுடன், பச்சை நிறம் முஸ்லிம்களையும், செம்மஞ்சள் நிறம் தமிழர்களைக் குறித்து நிற்கின்றன. இந்த கோடுகள் ஒவ்வொன்றும் கொடியின் ஏழில் ஒரு பங்கிற்கு சமமாக இருக்க வேண்டும்.

1972 ஆம் ஆண்டில் இலங்கை முதன்முதலில் குடியரசாக மாற்றப்பட்டபோது, தேசியக் கொடியில் சித்தரிக்கப்பட்ட பாரம்பரிய அரச மர இலைகள் இயற்கை அரச மரஇலைகளைப் போலவே மாற்றப்பட்டன. இந்த திருத்தப்பட்ட கொடி முதன்முதலில் 1972 மே 22 ஆந் திகதி நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டத்தில் திறக்கப்பட்டது. 1978 செப்டம்பர் 09 ஆந் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 6 இரண்டாம் அட்டவணையில் தேசியக் கொடி இணைக்கப்பட்டுள்ளது.

புதிய அரச மர இலைகளைத் தவிர, தற்போதைய கொடி 1951 மார்ச் 02 ஆந் திகதி தேசிய கொடி உருவாக்கும் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அதே கொடியாகும்.

இலங்கையின் தேசிய சின்னம்

பிரித்தானியாவின் அரச காலனியாக இருந்த போது, பிரித்தானியாவின் சின்னத்தை இலங்கை பயன்படுத்தியது, மேலும் 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னரும் தொடர்ந்தும் அதனையே பயன்படுத்தியது. இலங்கைக்கு மிகவும் பொருத்தமான ஒரு அரச சின்னத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின்படி, ஒரு புதிய அரச சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வலது முன் பாதத்தில் வாளேந்திய சிங்கம், ஒரு 'பாலாபெதி' வடிவமைப்பால் சூழப்பட்டுள்ளது. கீழே சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நாட்டின் பெயரைக் கொண்ட ஒரு துண்டு அமைந்திருந்தது.

1972 ஆம் ஆண்டு மே 22 ஆந் திகதி நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு புதிய தேசிய சின்னம் தேர்வு செய்யப்பட்டது. வாளேந்திய சிங்கம் மற்றும் 'பாலாபெதி' வடிவமைப்பைத் தவிர, புங்கலாசா, தர்மச்சக்கரம், சூரியன், சந்திரன் மற்றும் இரண்டு நெல் கொத்துக்கள் சித்தரிக்கப்பட்டன.

இலங்கையின் தேசிய மலர்

1986 பெப்ரவரி 26ஆந் திகதி நீல அல்லி மலர் இலங்கையின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. இதன் தாவரவியல் பெயர் 'நிம்பீ ஸ்டெல்லாட்டா'. இந்த மலர் பல சிங்கள, பாலி மற்றும் சமஸ்கிருத இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'குவலய', 'இந்தீவர', 'நிலுப்பல', 'நீலோத்பல' மற்றும் 'நிலுபுல்' என்றும் அழைக்கப்படும் இந்த மலர் பௌத்த இலக்கியத்திலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இளவரசர் சித்தார்த்தரின் தடம் பதிக்கப்பட்ட 108 சடங்கு வடிவமைப்புகளில் 'நீல அல்லி மலர்' இருந்ததாகக் கூறப்படுகின்றது. வரலாறு முழுவதும் ஒரு சடங்குபூர்வமான மலராக இருந்தது என்பதை இது நிரூபிக்கின்றது. சிகிரியா ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள பெண்கள் தமது கைகளில் நீல அல்லி மலர்களையே ஏந்தி நிற்பதாக நம்பப்படுகின்றது. 'சந்தேச காவ்ய' என்று அழைக்கப்படும் பாரம்பரியக் காவியம், பெண்களின் கண்களை நீல அல்லி மலருடன் ஒப்பிடுவதுடன், காது ஆபரணமாகவும் இது பயன்படுத்தப்படுகின்றது.

ஆழமற்ற நீரில் வளரும் நீல அல்லி மலர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. நீல நிறத்தில் ஊதா நிறமாக இருக்கும் இந்த மலரின் மையத்தில் இதழ்கள் அதிக அளவில் காணப்படும். நீல அல்லி மலர் உண்மை, தூய்மை மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாகவும் கருதப்படுகின்றது.

இலங்கையின் தேசிய மரம்

நாக மரத்தை தேசிய மரமாக அறிவிப்பதற்கான பிரேரனையொன்று 1986 பெப்ரவரி 26 ஆந் திகதி அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமூக மற்றும் கலாச்சார ரீதியாக இலங்கை பல நூற்றாண்டுகளாக நாக மரத்துடன் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. இது 7 காரணங்களுக்காக தேசிய மரமாக தேர்வு செய்யப்பட்டது.

(1) இது இலங்கையில் தோன்றிய ஒரு மரம்

(2) அதன் பயன்பாடு

(3) வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம்

(4) வெளிப்புற தோரணை

(5) பரந்த விநியோகம்

(6) நிறம் மற்றும் இயல்பு

(7) அதை எளிதாக வரைவதற்கான திறன்

தாவரவியல் ரீதியாக இது 'மெசுவா நாகசாரியம்' என்றும் ஆங்கிலத்தில் அயர்ன் வூட் ட்ரீ என்றும் அழைக்கப்படுகின்றது. கம்பீரமான இந்த மரம் அதன் கம்பீரமான அழகால் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றது. ஆங்கிலப் பெயர் குறிப்பிடுவது போல இந்த மரம் மிகவும் கடினமானதும், நீடித்ததுமாகும். கோயில்களையும் தேவாலயங்களையும் நிர்மாணிப்பதற்கு இந்த மரம் பயன்படுத்தப்படுகின்றது. 

Close