Ravinatha Aryasinha

செயலாளர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக, 31 ஒக்டோபர் 2018 அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

இதற்கு முன்னர், 2018 ஏப்ரல் மாதம் முதல் தூதுவர் ஆர்யசிங்க அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வணிகப் பிரிவின் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.

1988ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு இணைந்த அவர், புது டில்லியின் இரண்டாம் செயலாளராகவும் (1989 – 1991), வொஷிங்டன் டி.சி.யில் அமைச்சராகவும், அதன் பின்னர் தூதுவர் அந்தஸ்த்துள்ள தூதரகத்தின் பிரதி தலைவராகவும் (2002 – 2006) கடமையாற்றினார். 2008 ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரையான காலப்பகுதியில் பெல்ஜியம், லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராகவும், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் கொன்சுல் நாயகமாகவும், அதே தருணத்தில் ஹொலி சீக்கான இலங்கையின் தூதுவராகவும் (2012 ஜூலை – 2018 மார்ச்) கடமையாற்றினார். 

Close