வெளிநாட்டில் நிகழும் மரணங்கள்

மனித உடலை நாட்டிற்குக் கொண்டு வருதல்

தகைமை பெறுவோர் : இலங்கைப் பிரஜைகள், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை கொண்டிருக்கும் இலங்கையர்கள்

விண்ணப்பிக்கும் முறை :       நேரடியாக கொன்சியூலர் பிரிவில் சமர்ப்பித்தல்

நிர்வாக சுற்றறிக்கை இல. 04/2017க்கு அமைய அனைத்து பிரதேச செயலகங்களின் வாயிலாக

விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும் இடங்கள் :
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு
2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்,
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01

விண்ணப்பக் கட்டணம் : இலவசம்

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரம் : வேலை நாட்களில் 08.30 மணி – 16.00 மணி (விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் ஆவணங்களை அமைச்சின் கடமை அலுவலரிடம் கையளிக்கலாம்) 

இச்சேவையினைக் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள் : ஆவணக் கட்டணம் இலவசம்

சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவையும் முன்னுரிமைச் சேவையும்)          :

 • வெளிநாட்டுத் தொழில் தருநர் அல்லது அணுசரனையாளர் ஆவண வேலைகளைப் பூர்த்தி செய்தவுடன் உடனடியாக
 • 3 – 15 நாட்களினுள் (சவூதி அரேபியாவில் நிகழும் மரணங்கள் தொடர்பில் அங்குள்ள நீண்ட நடைமுறைகள் காரணமாக மனித உடலை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு 2 – 3 வாரங்கள் எடுக்கலாம்).

தேவையான துணை ஆவணங்கள் :

 • இறந்தவரின் விபரங்கள் (கடவுச்சீட்டின் நிழற் பிரதி, தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்)
 • மனித உடலை நாட்டிற்கு கொண்டு வருகின்ற / அடக்கம் செய்கின்ற / தகனம் செய்கின்ற சட்டபூர்வ பின் உரித்தாளியின் சம்மதம் தெரிவிக்கின்ற சத்தியக்கூற்று
  • இறந்தவர் திருமணம் செய்திருப்பின், உறவினை உறுதிப்படுத்துவதற்கு விண்ணப்பதாரியின் / முறைப்பாட்டாளரின் திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ். இல்லாவிடின், இறந்தவரின் பெற்றோர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
  • வெளிநாட்டு தொழில் தருநரின் / முகவரின் தொடர்பு விபரங்களும், பெயரும்
  • இலங்கையில் மனித உடலைப் பெற்றுக் கொள்கின்றவரின் விபரங்கள்
  • ஏதேனும் பெயர் வேறுபாடுகளுக்கு, மேலதிக ஆவணங்கள் கோரப்படும்

வெளிநாட்டில் நிகழ்ந்த மரணங்களை பதிவு செய்தல்

நெருங்கிய உறவினர் கொன்சியூலர் பிரிவிற்கு ஊடாக மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கோரப்படும் பின்வருவம் ஆவணங்களை சமர்ப்பிக்கப்படல் வேண்டும் :

 • செயன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூபா. 2,170 செலுத்தப்பட்டு பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
 • இறப்பு நிகழ்ந்த நாட்டினால் விநியோகிக்கப்பட்ட உள்நாட்டு மரணச் சான்றிதழ், இறந்தவரின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டு, நல்லடக்கம் அல்லது நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
 • விண்ணப்பதாரி நெருங்கிய உறவினர் இல்லாவிடின், நெருங்கிய உறவினரிடம் ஆலோசனை பெறல் வேண்டும்
 • கொடுப்பனவு பற்றுச் சீட்டுடன் பதிவாளர் நாயகத்தை நீங்கள் சந்திக்கலாம்
 • மரணப்பதிவுடன் தொடர்புடைய ஆவணங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
 • மரணச் சான்றிதழின் மூலப்பிரதியினை கொன்சியூலர் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்
 • மரணச் சான்றிதழின் மேலதிகப் பிரதிகளை பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்

விண்ணப்பம் / படிவத்தினை பதிவிறக்கம் செய்தல்

விண்ணப்பம்: சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்

சத்தியக்கூற்று: சிங்களம் | தமிழ்| ஆங்கிலம்

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close