பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • 2008.01.01ற்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் அதன் உண்மையான பதிவேடு அல்லது பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் தரவு முறைமையிலிருந்து பெறப்பட்டு, 2008.01.01ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரோ மாவட்ட பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் மாத்திரமே சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும். ‘உண்மையான ஆவணம்’ எனப்படுவது பிறப்பு, திருமண மற்றும் இறப்பின் போது பதிவாளரினால் வழங்கப்படும் சான்றிதழைக் குறித்து நிற்காது, மாறாக பிறப்பு, திருமண மற்றும் இறப்பு நிகழ்ந்த பின்னர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தினால் தரவு முறைமையிலிருந்து அல்லது உத்தியோகபூர்வ பதிவிலிருந்து பெறப்பட்ட பிரதியை குறித்து நிற்கும் என்பதனை கவனித்தல் வேண்டும். (மாவட்ட பதிவாளரினால் உண்மைப் பிரதியாக மீள சான்றுப்படுத்தப்படும் பட்சத்தில், பிறப்பு, திருமண மற்றும் இறப்பு நிகழ்ந்த போது வழங்கப்பட்ட ஆவணம் சான்றுறுதிப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும)
  • தேடலின் ‘தேடலுக்கான விளைவுகள் எவையும் கிடைக்கவில்லை’யுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏதேனும் மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது கொழும்பிலுள்ள மாளிகாவத்தையில் உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகத்தின் மத்திய பதிவேட்டு அறையில் உள்ள பதிவகம் ஒன்றில் அத்தகைய தரவு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்படும். ஆவணத்தின் இரண்டாம் பிரதியும் இல்லை என சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.
  • விவாகரத்து கட்டளை வழங்கிய காதி நீதிமன்றத்திற்கு சார்பான மாவட்ட செயலகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் முஸ்லிம் விவாகரத்து சான்றிதழ்கள் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close