கிழக்கு ஆசியாப் பிரிவு
கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், மங்கோலியா, நியூசிலாந்து, கொரியக் குடியரசு, ஜனநாயக மக்கள் கொரியக் குடியரசு மற்றும் பசிபிக் தீவுகளின் ஒரு பகுதியான பிஜி, கிரிபடி, நாவுரு, பப்புவா நியூ கினியா, சொலமன் தீவுகள், டொங்கா, டுவாலு, மற்றும் வனட்டு ஆகிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு கிழக்கு ஆசியாப் பிரிவு பொறுப்பானதாகும்;.
இந்தப் பிராந்தியத்தில் 06 இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் பதவிகளை இலங்கை நிறுவியுள்ளது.
மேலும், ஆசியாவில் தொடர்புகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான மாநாடு (சி.ஐ.சி.ஏ) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) மற்றும் பாலி செயன்முறை போன்ற பிராந்திய அமைப்புகளுடனான உறவுகளைப் பேணும் பணியை இந்தப் பிரிவு மேற்கொள்கின்றது.