உபசரணைப் பிரிவு

உபசரணைப் பிரிவு

உபசரணைப் பிரிவு

வெற்றிகரமான இராஜதந்திரத்திற்கான சூழலை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை முன்னேற்றுவதறடகு உபசரணைப் பிரிவு முயற்சிக்கின்றது. ஜனாதிபதிகள், பிரதமர்கள், ஆட்சி செய்யும் மன்னர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களை இலங்கைக்கு வரவேற்கும் முதலாவது உதவிக் கரத்தை எமது குழு நீட்டுகின்றது. இராஜதந்திர ஈடுபாட்டின் முன் வரிசையில் பணியாற்றுவதன் மூலம், இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டை மதிக்கும் உலகெங்கிலுமுள்ள மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையிலான கலாச்சாரப் பரிமாற்றத்தையும் அதிகமான புரிதலையும் ஊக்குவிக்கின்றோம்.

சம்பிரதாயபூர்வ களம்

நடை, நேர்த்தி மற்றும் விரிவான ஆழ்ந்த கவனத்துடன் பணிபுரிதல், பிரிவுத் திட்டங்கள், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர், வெளிவிவகார செயலாளர் மற்றும் ஏனைய உயர்மட்ட இலங்கைப் பிரமுகர்களால் வழங்கப்படும் பரந்த அளவிலான சடங்கு மற்றும் உத்தியோகபூர்வ செயற்பாடுகளைத் திட்டமிட்டு, செயற்படுத்தி, ஆதரிக்கின்றது.

வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்று, வழிநடாத்துவதில் முறையான ஆசாரம், உத்தியோகபூர்வ சம்பிரதாயங்கள் மற்றும் கண்ணியமான விழாக்களைப் பயன்படுத்துவதே சர்வதேச நெறிமுறையின் சாராம்சமாகும். காலவரையறையற்ற இந்தப் பாரம்பரியத்தை பராமரிப்பதில் உபசரணைப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கின்றது. அழைப்புகள் மற்றும் இருக்கைகள், நிகழ்ச்சி நிரல்கள், அலங்காரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ பொழுதுபோக்கு போன்றவற்றின் ஒவ்வொரு விவரத்தையும் கருத்தில் கொண்டு, கலாச்சாரக் கருத்துக்களைக் கடைப்பிடித்து, கௌரவ விருந்தினர்களை வரவேற்றல் மற்றும் வசதியாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், உபசரணை அதிகாரிகள் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகத் திட்டமிடுகின்றார்கள். இந்த நிகழ்வுகளில், உத்தியோகபூர்வ மற்றும் அரச மதிய போசனங்கள், அமைச்சர்கள் மட்ட மற்றும் முக்கிய சர்வதேச உச்சி மாநாடுகள், வரவேற்புகள், நற்சான்றிதழ் மற்றும் பதவியேற்பு விழாக்கள் ஆகியவை உள்ளடங்கும்.

சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பாராளுமன்ற அமர்வுகள், பதவியேற்புகள் மற்றும் ஏனைய விழாக்கள் போன்ற உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் இராஜதந்திரப் படைகளின் பங்கேற்பையும் உபசரணைப் பிரிவு ஏற்பாடு செய்கின்றது. மேலும், உபசரணைப் பிரிவு இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை வரிசையை பராமரிக்கின்றது. கொடி சார்ந்த சம்பிரதாயம், முகவரி, இருக்கை மற்றும் அழைப்பிதழ்கள், அத்துடன் உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள் பற்றிய கேள்விகளுக்கும் இது பதிலளிக்கின்றது.

சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள்

இலங்கையிலுள்ள தூதரகப் படையினருடனான தொடர்பு மற்றும் தொடர்பாளராக உபசரணைப் பிரிவு செயற்படுகின்றது. இந்தப் பிரிவு பின்வருவனவற்றுக்குப் பொறுப்பானதாகும்:

  1. இருதரப்புத் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைவர்கள், தூதரகப் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களின் அங்கீகாரத்துடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகள்,
  2. சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்தல்.

ஜனாதிபதி செயலகம் / ‘ஜனாதிபதி மாளிகையில்’ ஜனாதிபதி சான்றுகளை வழங்குதல் உள்ளிட்ட புதிய இருதரப்பு தூதரகங்கள் மற்றும் பிரதிநிதிகள் தலைவர்களுக்கான உடன்பாட்டு செயன்முறையை இந்தப் பிரிவு வழிநடத்துகின்றது. இருதரப்பு வெளிநாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைவர்கள் மற்றும் தூதரகப் பொறுப்பாளர்களின் முன்னுரிமையை பராமரிப்பதற்கும், வெளிநாட்டு இராஜதந்திரப் பட்டியலை வெளியிடுவதை நிர்வகிப்பதற்கும் இந்தப் பிரிவு பொறுப்பாகும். இந்தப் பிரிவு இராஜதந்திர சமூகத்திற்கான ஒட்டுமொத்த தொடர்பாளராக செயற்படுவதுடன், வெளிநாட்டு இராஜதந்திரத் தூதரகங்களுடன் அமைச்சின் ஈடுபாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கையாளுகின்றது. புதிய தூதரகங்கள் மற்றும் தூதரகப் பதவிகளை நிறுவுவது தொடர்பான இராஜதந்திர பணிகள் மற்றும் ஏனைய வரிசை நிறுவனங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் அரச மற்றும் உள்நாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு பொதுவான அக்கறையுள்ள விடயங்களில் இந்தப் பிரிவு ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குகின்றது.

விஜயங்கள்

வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களின் விஜயம் முதல் இலங்கையிலிருந்து வெளியேறுவது வரை குறித்த அரச தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கான விரிவான திட்டங்களை ஏற்பாடு செய்து செயற்படுத்த இந்தப் பிரிவு திட்டமிட்டுள்ளது. உபசரணைப் பிரிவு இராஜதந்திரத்தின் முன் வரிசையில் செயற்பட்டு, வெளிநாட்டு உறவுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவு, பெரும்பாலும் அதிமேதகு ஜனாதிபதி, முதல் பெண்மணி, கௌரவ பிரதமர், உத்தியோகபூர்வ மற்றும் அரச விஜயங்கள், சர்வதேசக் கூட்டங்கள் மற்றும் உச்சிமாநாடுகளுக்கு செல்லும் கௌரவ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளர் மற்றும் ஏனைய வரிசை நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகின்றது. வருகைக்கு முன்கூட்டியே, ஆரம்பம் முதல் இறுதி வரை விரிவான அட்டவணையை உருவாக்குவதற்கு இந்தப் பிரிவு முன்கூட்டியே பிரதிநிதிகள் மற்றும் தூதரக ஊழியர்களுடன் இணைந்து செயற்படுகின்றது. தூதரகத்துடன் பணிபுரியும் அனைத்து தர்க்கரீதியான கருத்தாய்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து கலாச்சார மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதன் மூலம் இந்தப் பிரிவு வெற்றிகரமான வருகைக்கான வரைபடத்தை தயார் செய்யும். மேலும், நிகழ்வுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு வருகை தரும் ஜனாதிபதியின் பிரதிநிதிகளுக்கு உபசரணை ஊழியர்கள் உதவுகின்றார்கள்.

அதிகாரபூர்வ ஈடுபாடுகளுக்கான பரிசுகள்

ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் அதிகாரிகள் சார்பாக அனைத்து இராஜதந்திரப் பரிசுகளையும் உபசரணைப் பிரிவு பெற்று, இராஜதந்திரப் பரிசுகள் தொடர்பான பதிவுகளை பராமரிக்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் ஆகியோர் பெற்றுக் கொள்ளும் அனைத்து இராஜதந்திரப் பரிசுகளும் இதில் அடங்கும். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர், வெளிவிவகார செயலாளர் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றும் உபசரணைப் பிரிவு, வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வழங்குவதற்கான பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் உதவுகின்றது.

நிகழ்வுகள் மற்றும் மாநாடுகள்

இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ நடைபெறும் பாரிய சர்வதேச பலதரப்பு உச்சி மாநாடுகள், பேச்சுக்கள் மற்றும் ஏனைய சர்வதேச மாநாடுகளை நடாத்துவதில் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ வெளிநாட்டு உறவுகள் அமைச்சருக்கு ஆதரவளிப்பது உபசரணைப் பிரிவின் முதன்மையான நோக்கமாகும். இந்த முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் உட்கட்டமைப்பு மற்றும் தளபாடத் தளத்தை திட்டமிடுதல், பணியாளர்கள் மற்றும் செயற்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்தப் பிரிவு பொறுப்பானதாகும்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

உபசரணைப் பிரிவின் தலைவர்

பெயர்: திரு. செனரத் திசாநாயக்க
தொலைபேசி: +94 112 421 816
தொலைநகல்: +94 112 325 346
மின்னஞ்சல்: senerath.dissanayake(at)mfa.gov.lk

பிரதி உபசரணைப் பிரிவின் தலைவர்

பெயர்: திரு. அஹமத் ராஸி
         தொலைபேசி: +94 112 424 509                                    தொலைநகல்: +94 112 325 346                            மின்னஞ்சல்: ahamed.razee(at)mfa.gov.lk 

பிரதி உபசரணைப் பிரிவின் தலைவர்

பெயர்:திருமதி மதுக விக்கிரமாராச்சி
தொலைபேசி: +94 112 424 509
தொலைநகல்: +94 112 325 346
மின்னஞ்சல்: madhuka.wickramarachchi(at)mfa.gov.lk 

உபசரணைப் பிரிவின் உதவித் தலைவர்

பெயர்: திருமதி  நிரோஷா கே. ஹேரத்
தொலைபேசி: +94 115 920 276
தொலைநகல்: +94 112 325 346
மின்னஞ்சல்: nirosha.herath(at)mfa.gov.lk

கிளைத் தலைவர்

பெயர்: திரு. எல்.டி. ரஞ்சித் சில்வா
தொலைபேசி: +94 112 327 048
தொலைநகல்: +94 112 328 681

உபகரணப் பிரிவின் தலைவரின் தனிப்பட்ட உதவியாளர்

பெயர்: திருமதி  நிரோஷா கே. ஹேரத்
தொலைபேசி: +94 112 421 816
தொலைநகல்: +94 112 325 346
மின்னஞ்சல்: cprot@mfa.gov.lk

உபசரணைப் பிரிவின் தலைவரின் தனிப்பட்ட உதவியாளர்

பெயர்: திருமதி. சித்ரா சேனாரத்ன
தொலைபேசி: +94 112 421 816
தொலைநகல்: +94 112 325 34

Close