நீதிமுறை ஆவணங்கள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • நீதிமுறை ஆவணங்களை சான்றொப்பமிடுவதற்காக ஆவணங்களின் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்பதுடன், அவை அனைத்தும் தொடர்புடைய நியாயாதிக்க பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தொடர்புடைய பதிவாளரினால் ஆவணத்திலுள்ள விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தால் மாத்திரமே அது சான்றொப்பமிடப்படும்.
  • தீர்வை  முற்றான தீர்வைவழங்கப்பட்டிருப்பின் குறித்த முற்றான தீர்வை மீது மாத்திரமே விவாகரத்து சான்றுகள் சான்றுறுதிப்படுத்தப்படும். எனினும், பின் முற்றான தீர்வையையும் இவ்வலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். சான்றுப்படுத்தலுக்காக பின் முற்றான தீர்வை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதனை கவனத்திற் கொள்ளவும்.
  • தொடர்புடைய நியாயாதிக்க பதிவாளரினால் பெற்றுக்கொள்ளப்படும் நேர அளவானது இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும், ஆதலால், காலதாமதம் தொடர்பான கோரிக்கைகள் தொடர்புடைய நியாயாதிக்க பதிவாளரிடமே கோரப்படலாம்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close