Vasantha Senanayake

வசந்த சேனாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

2017 யூன் மாதத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக வசந்த சேனாநாயக்க நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்ததுடன், 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியினால் வன ஜீவராசிகள் மற்றும் விளையாட்டுகள் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இந்த அமைச்சர் பதவியை வகித்த போது, சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில், குறிப்பாக அத்துமீறிய வேட்டை, காடழிப்பு மற்றும் யானைக்குட்டிகளின் சட்ட விரோதமான வர்த்தக செயற்பாடுகளுக்கு எதிராக சுறுசுறுப்புடன் செயற்பட்டுள்ளார்.

வசந்த சேனாநாயக்க 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் வட மத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் 75,000 இற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன், நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் அநேக புராதன நீர்ப்பாசன வலையமைப்புக்களை புனரமைப்பு செய்திருந்ததுடன், நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட அநேக கருத்திட்டங்களுக்கு தலைமைத்துவம் வகித்துள்ளார்.

தேசிய லொத்தர் சபை, நீர் வளங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட ஜனதா உரத்தொழில் முயற்சிகள் நிறுவனம் ஆகிய அநேக அரசாங்க சபைகளின் தலைவராகச் சேவையாற்றியுள்ளதுடன், தற்போது அவருடைய சொந்த மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவராகவுள்ளார்.

அவரது ஆரம்ப கல்வியை கொழும்பு புனித. தோமஸ் ஆரம்ப பாடசாலையில் தொடர்ந்ததுடன், அவரது தலைமைத்துவ தகைமைகள் காரணமாக சிரேஷ்ட கல்வியாண்டில் தலைமைப் பொறுப்பு மாணவராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணிப் பட்டதாரி கற்கையைத் தொடர்ந்த அவர், 1995 இல் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் (ஐக்கிய இராச்சியம்) சட்ட கலைமாணி பட்டங்களைப் பெற்றதுடன், சட்டக் கல்வியையும் பயின்றார்.

Close