இலங்கையில் முதலீடு

இலங்கைக்கு பயணம்


Website: https://www.srilanka.travel

Contact:

  
  
  
 

இலங்கை பற்றி

தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவு நாடான இலங்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பதிவு ரீதியான வரலாற்றைக் கொண்டுள்ளது. 

முதலீடு


இலங்கையின் பொருளாதாரத்திற்கு அந்நிய நேரடி முதலீடு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. அந்நிய நேரடி முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கையை ஊக்குவிப்பதிலான வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கைத் தூதரகங்களின் முக்கியமான பங்கை அங்கீகரிக்கும் முகமாக, வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கான முதலீட்டு இலக்குகளை முதலீட்டு சபையுடன் கலந்தாலோசித்து 2018 முதல் பொருளாதார விவகாரப் பிரிவு நிர்ணயித்துள்ளது. குறித்த பல தூதரகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பான பிரேரணைகளின் அடிப்படையில் நிகழ்வுகள் வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்பட்டன.

அபிவிருத்திப் பங்காளர்களாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்

பொருளாதார விவகாரப் பிரிவில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை ஈடுபடுத்துவது குறித்த கருத்துப் பத்திரத்தில், அபிவிருத்திப் பங்காளர்களாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் கீழான இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் ஊக்குவிப்பு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன:

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான முதலீடு மற்றும் வர்த்தக வட்ட மேசைக் கூட்டம், 2 செப்டம்பர் 2019, லண்டன், ஐக்கிய இராச்சியம்

மெல்போர்னிலுள்ள இலங்கையின் உதவித் தூதரகத்தினூடாக ஆர்வத்தைத் தோற்றுவிக்கும் மற்றும் முதலீட்டாளர்களை அடையாளம் காணும் நோக்கில், இலங்கைச் சமூகத்தினருக்காக, 'ஒரு கிராமம் ஒரு தயாரிப்பு' மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் 2,000 ஏற்றுமதியாளர்கள் அபிவிருத்தித் திட்டம் போன்றவற்றின் அறிமுகம், 13 அக்டோபர் 2019

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

பின்வரும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன:

முதலீட்டு ஊக்குவிப்பு மன்றம் 'இலங்கையில் முதலீட்டுக் காலநிலை மற்றும் வணிக வாய்ப்புக்கள்', 2019 பெப்ரவரி 19 முதல் 22 வரை, சியோல், கொரியா.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரித்தானிய இலங்கை வணிக சமூகத்திற்கான முதலீடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வட்ட மேசை அமர்வு, 2019 செப்டம்பர் 02.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட வரி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, உள்ளகப் பிணைப்புடைய மற்றும் வெளியகப் பிணைப்புடைய முதலீட்டுத் திட்டங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு பொருளாதார விவகாரப் பிரிவு தயாராக உள்ளது.

செயற்பாடுகள் படங்கள் மூலமாக

அவுஸ்திரேலியா / சிட்னி (வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நிகழ்வு)                 

கொரியக் குடியரசு      

ஐக்கிய இராச்சியம்

 

வர்த்தகம்


இலங்கைத் தூதரகங்கள் மற்றும் அரச பொருளாதார நிறுவனங்களின் பங்கேற்புடன், பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு பொருளாதார விவகாரப் பிரிவு முக்கியமாக உதவுகின்றது. ஒவ்வொரு சந்தையிலும் வெவ்வேறு வல்லமைகள் இருப்பதனால், முக்கியமான சந்தைகளை அடையாளம் காண்பதற்காகவும், அந்த வல்லமைகளுக்கு ஏற்ற ஊக்குவிப்பு உத்திகளை முன்மொழிவதற்காகவும் இந்த துணைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பொருளாதார இராஜதந்திரத் திட்டங்களை நேரடியாக ஈடுபடுத்தவும், நிதியளிக்கவும், ஒழுங்கமைக்கவும் பொருளாதார விவகார பிரிவு முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதே வேளை, 2020 ஆம் ஆண்டில் வரிசை முகவர்கள் மற்றும் தனியார் துறையின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உலகளாவிய ரீதியில் இலங்கை தடம் பதிப்பதனை மேம்படுத்துவதற்கும், நாட்டிற்கு உறுதியான பொருளாதார நன்மைகளை வழங்குவதற்குமாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், வளர்ந்து வரும் சந்தைகளில் வெளிநாடுகளிலுள்ள 26 இலங்கைத் தூதரகங்கள் 39 இலக்குப் பிரச்சாரங்களை மேற்கொள்வதில் துணைபுரிந்தன. இந்த ஊக்குவிப்பு நிகழ்வுகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஏற்றுமதி மூலோபாயத்தின் முக்கிய மையங்களுக்கு ஏற்ப அமைந்தன. ஊக்குவிப்பு நிகழ்வுகளின் நிறைவைத் தொடர்ந்து, ஒவ்வொரு தூதரகத்திலிருந்தும் முன்னேற்ற அறிக்கைகளை பொருளாதார விவகாரப் பிரிவு கோரியது. இலங்கை ஏற்றுமதியாளர்கள் மற்றும் நோக்கங்களையுடைய நாடுகளிலுள்ள இறக்குமதியாளர்களிடையே நேரடித் தொடர்புகளை உறுதிசெய்து மேம்படுத்துவதன் மூலம் குறித்த ஊக்குவிப்பு நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க ஊக்கத்தினை அளித்துள்ளன என பெற்றுக்கொள்ளப்பட்ட அத்தகைய அறிக்கைகள் சுட்டிக்காட்டின. இந்த குறிப்பிட்ட நிகழ்வுகளின் மூலம் பல நேரடி ஏற்றுமதிக் கட்டளைகள் செயற்படுத்தப்பட்டன.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள்:

நாடு/தூதரகம் வருடம் திட்டம்/ நடவடிக்கையின் பெயர்
அவுஸ்திரேலியா / சிட்னி 2018/2019 இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை எளிதாக்குவதற்கும், ஆதரவளிப்பதற்குமாக, விரைவான சந்தை அணுகல் திட்மொன்றில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரின் தலைமையின் கீழ் ஐ.டி. - பி.பி.எம். நிறுவனங்கள் 2018 நவம்பர் 28 முதல் 30 வரை சிட்னிக்கு விஜயம் செய்தன.அக்டோபர் 29 முதல் 31 வரை சர்வதேச மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற செபிட் அவுஸ்திரேலியா நிகழ்வில் நாட்டின் கூடாரம் அமைக்கப்பட்டது.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக 2020 டிசம்பர் 19 ஆந் திகதி இலங்கை சங்கம் மற்றும் வணிக சமூகத்துடன் பிணைக்கும் சந்திப்பு இடம்பெற்றது.
அவுஸ்திரேலியா / மெல்போர்ன் 2019 “ஒரு கிராமம் ஒரு தயாரிப்பு” மற்றும் “2000 புதிய ஏற்றுமதியாளர்கள்” அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பஹ்ரைன் 2018 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 01 வரை இலங்கை உற்பத்தி மற்றும் உணவுச் சந்தை
பெல்ஜியம் / பிரஸ்ஸல்ஸ் 2019 பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள கடல் உணவு எக்ஸ்போ குளோபலில் 2019 மே 7 முதல் 9 வரை இலங்கை பங்கேற்றது. நியாயமான வர்த்தகம் மற்றும் இயற்கைத் தயாரிப்புக்கள் ஊக்குவிப்பு, பெல்ஜியம், 2019 அக்டோபர் 10 முதல் 11 வரை.
கியூபா / ஹவானா 2019 கியூபாவின் இறக்குமதி முகவர்கள் மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கிடையிலான வட்டமேசை கலந்துரையாடல் மற்றும் வணிக சந்திப்பு, 2019 ஜூன் 25 முதல் 29 வரை.
சீனா / பெய்ஜிங் 2019 2019 ஆம் ஆண்டிற்கான தலைப்புக் கொண்ட நாடாக ஜூன் 12 முதல் 18 வரை குன்மிங்கில் நடைபெற்ற 6 வது தெற்காசியா எக்ஸ்போவில் 104 இலங்கை கண்காட்சியாளர்களுடன், 600 சதுர மீட்டர் தலைப்புக் கூடாரத்தையுடைய பரப்பளவில் எமது முக்கிய ஏற்றுமதித் தயாரிப்புக்களான தேயிலை, இரத்தினம் மற்றும் நகைகள், கைவினைப்பொருட்கள், சுவைளயூட்டிப் பொருட்கள், ஆயுர்வேத தயாரிப்புகள், விவசாயத் தயாரிப்புகள் மற்றும் சீனாவிலிருந்து விஜயம் செய்யும் பெரிய பார்வையாளர்களுக்கு கொழும்பு துறைமுக நகரம், இலங்கை - தெற்காசியாவின் மையம் மற்றும் இன்னும் பல சுற்றுலாத் தலங்களை சிறப்பித்துக் காட்டும் வகையில் இலங்கை கலந்து கொண்டது.
பிரான்ஸ் / பரிஸ் 2019 பரிஸ், பிரான்ஸில் 2019 டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற்ற 'உணவு மூலப்பொருள் ஐரோப்பா - 2019 கண்காட்சி' இல் இலங்கையின் பங்கேற்பு.
இந்தியா / புது டில்லி 2019 2019 டிசம்பர் 13 முதல் 25 வரை நடைபெற்ற இந்தியா சர்வதேச மெகா வர்த்தகக் கண்காட்சியிலும், பி 12 பி கூட்டங்களைத் தொடர்ந்து இடம்பெற்ற 'இலங்கையுடன் வர்த்தகம் செய்தல்' குறித்த 2019 டிசம்பர் 12 மற்றும் 2019 டிசம்பர் 16 ஆகிய திகதிகளில் நடைபெற்ற வணிக ஊடாடும் அமர்விலும் பங்கேற்றது.
கொரியா / சியோல் 2019 'இலங்கையில் முதலீட்டு காலநிலை மற்றும் வர்த்தக வாய்ப்புகள்' தொடர்பாக 2019 பெப்ரவரி 19-22 வரை நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு மன்றம்
ஜப்பான் / டோக்கியோ 2018 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 01 வரை நடைபெற்ற இலங்கை உற்பத்தி மற்றும் உணவுச் சந்தை.
ஓமான் / மஸ்கட் 2019 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 01 வரை நடைபெற்ற இலங்கை உற்பத்தி மற்றும் உணவுச் சந்தை. இலங்கை உணவுத் துறை நிறுவனங்களுக்கும், ஓமானி வர்த்தக சமூகத்திலிருந்து பங்குபற்றிய ஓமானிலுள்ள நிறுவனங்களுக்குமிடையில் மஸ்கட்டில் உள்ள அல்-ஃபலாஜ் ஹோட்டலில் 2019 அக்டோபர் 01ஆந் திகதி நடைபெற்ற பி 2 பி சந்திப்பு
ரஷ்யா / மொஸ்கோ 2019 வெபினார் அமர்வு, 10 டிசம்பர் 2019.
சிங்கப்பூர் 2019 2019 நவம்பர் 11-15 இல் நடைபெற்ற சிங்கப்பூர் ஃபிண்டெக் விழா 2019 இல் இலங்கை ஃபிண்டெக் நிறுவனங்கள் பங்கேற்றள.
சுவீடன் / ஸ்டொக்ஹோம் 2018/2019 நோர்டிக் இயற்கை; உணவுக் கண்காட்சி 2018 இல் பங்கேற்பு. 2019 அக்டோபர் 1-2 வரை நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வணிகக் கருத்தரங்கு, 2018 மற்றும் 2019. 2019 அக்டோபர் 1-2 வரை நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வணிகக் கருத்தரங்கு, 2018 மற்றும் 2019. இலங்கை கருவா ஊக்குவிப்பு - 2019.
தென்னாபிரிக்கா / பிரிட்டோரியா 2018 தென்னாபிரிக்காவின் கேப் டவுன் சர்வதேச மாநாட்டு மையத்தில் 2018 நவம்பர் 20 - 22 வரை நடைபெற்ற சர்வதேச ஆடை, ஆபரணம் மற்றும் காலணி வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை முதன்முறையாக ஆடைத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது.
ஐக்கிய இராச்சியம் 2018 ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரித்தானிய இலங்கை வணிக சமூகத்திற்கான முதலீடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வட்ட மேசை அமர்வு, 2019 செப்டம்பர் 02. ஊக்குவிப்பு வட்ட மேசை அமர்வு, மன்செஸ்டர், 2019 அக்டோபர் 10. தூதரகத்தின் வணிகப் பிரிவுக்கு வர்த்தகத் தொடர்பு தரவுத்தளத்தை கொள்வனவு செய்தல். தூதரகத்தின் வணிகப் பிரிவுக்கு வர்த்தகத் தொடர்பு தரவுத்தளத்தை கொள்வனவு செய்தல். உலகப் பிரயாண சந்தையில் இலங்கையின் ஆரோக்கிய சுற்றுலாவை ஊக்குவித்தல், 2019 நவம்பர் 04 - 06 வரை.

கொரியக் குடியரசு

கொரியா வர்த்தக மற்றும் தொழில்துறை சபையில் முதலீட்டு ஊக்குவிப்புக் கருத்தரங்கை ஆரம்பிப்பதற்கு முன்னர், கொரியக் குடியரசிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஜகத் அபேவர்ன பெப்ரவரி 19 ஆந் திகதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கேள்வி மற்றும் பதில் அமர்வு                                                                                     

கொரிய விவசாய இயந்திரத் தொழில்துறை கூட்டுறவின் தலைவர் / டேகுவிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் அதன் உறுப்பு நிறுவனங்களுடனான வணிக சந்திப்பில் இலங்கை முதலீட்டு சபையிலிருந்து தூதுக்குழு கலந்து கொண்டது.

பி 2 பி அமர்வு

கொரியக் குடியரசிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஜகத் அபேவர்ன மற்றும் இலங்கையின் பிரதிநிதிகள் குழு சியோலிலுள்ள சர்வதேச ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் உப தலைவர் சொங் யங்ஷியோலுடனான சந்திப்பில் பெப்ரவரி 20 ஆந் திகதி கலந்து கொண்டனர்.

Close