சர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு

சர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு

சர்வதேச துறையில் இலங்கையுடன் தொடர்புடைய பாதுகாப்பு மற்றும் காவல் விடயங்களில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் மையப் புள்ளியே சர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஆகும். இது சம்பந்தமாக, பிரிவினைவாத பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை எதிர்ப்பதில் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நிறுவனங்களை இந்தப் பிரிவு ஆதரிக்கின்றது.

இதில் பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் அடங்கும்,

  • இலங்கையின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க முகவர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் காவல் தொடர்பான விடயங்களில் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைத்தல்
  • பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயங்கள் மற்றும் வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து உள்ளூர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல்
  • அமைச்சின் தொடர்புடைய அரசியல் அமர்வுகள் மூலம் இருதரப்பு உறவுகளில் இந்தத் துறையில் கலந்துரையாடல் மற்றும் விரிவாக்கத்திற்கான நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிப்பு செய்தல்
  • இலங்கையின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பயங்கரவாதக் குழுக்களின் தடைப் பட்டியலை பராமரிக்க உதவுதல்
  • உள்ளூர் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாடுகளில் உள்ள எமது தூதரகங்கள் புதுப்பிக்கப்படுவதில் உள்ளூர் பாதுகாப்பு மற்றும் சட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல்
  • தேவை மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான வெளிநாடுகளில் நடந்து வரும் வழக்குகளை கண்காணித்தல் மற்றும் உதவுதல்
  • இலங்கைத் தூதரகங்களை வெளிநாடுகளில் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் உதவுதல்

அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவதில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் ஒருங்கிணைத்தல்

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

பொது இயக்குனர்

பெயர்
திருமதி ருவந்தி டெல்பிட்டிய 
மின்னஞ்சல்: ruwanthi.delpitiya(at)mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர்

பெயர்
திரு.சதுர பெரேரா
தொலைபேசி: +94 112 338 317
தொலைநகல் : +94 112 432 403
மின்னஞ்சல்: chatura.perera(at)mfa.gov.lk

உதவி இயக்குனர்

 
பெயர்: திரு. ரவீன் உபேசேகர
லுவலகம்: +94 112 432 403
மின்னஞ்சல்: raveen.ubeysekera(at)mfa.gov.lk

கிளைத் தலைவர்

பெயர்
திருமதி யு.ஏ. ரணசிங்க
தொலைபேசி: +94 112 432 403
தொலைநகல் : +94 112 432 403
மின்னஞ்சல்: ctu(at)mfa.gov.lk

Close