வெளிநாடுகளினால் வழங்கப்படும் பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • இந்த அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் தலையீட்டினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருப்பின் அல்லது கொன்சியூலர் பிரிவின் பதவிநிலை அலுவலர் ஒருவரினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரிகளினால் சுயேட்சையாக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பொலிஸ் தடைநீக்க அறிக்கைகள், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் அல்லது இலங்கையிலுள்ள குறித்த நாட்டின் தூதரகத்தினால் சான்றுப்படுத்தப்பட்டிருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நியதியை பூர்த்தி செய்யாத ஆவணங்கள் சான்றுப்படுத்தப்படுவதற்கு முன்னர் சரிபார்த்தல் மற்றும் சான்றுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக குறித்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறைக்கான கால வரையறை கொன்சியூலர் பிரிவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close