ஏற்றுமதி ஆவணங்கள்

தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

 • உண்மைச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, அது இந்த அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக சபையினால் முத்திரையிடப்பட்டிருந்தால் அவை சான்றுறுதிப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
 • ஏற்றுமதி ஆவணங்களின் தொகுப்பொன்றினை சான்றுப்படுத்துவதற்காக ரூபா. 6000/- அறவிடப்படும். ஒவ்வொரு தனியான உண்மைச் சான்றிதழுக்கும் தனித்தனியாக கட்டணம் அறவிடப்படும். ஒவ்வொரு உண்மைச் சான்றிதழிலும் பின்வரும் ஆவணங்கள் தொகுப்பாக இணைக்கப்படலாம்.
 • உண்மைச்சான்றிதழ்
 • விலைப்படடியல் / வர்த்தக விலைப்படடியல்
 • கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு
 • சுகாதார சான்றிதழ்கள்
 • ஆய்வுகூட சான்றிதழ்கள்
 • ஆய்வு அறிக்கைகள்
 • தூய்மைச் சான்றிதழ்
 • தடுப்பக்காப்பு சான்றிதழ்கள்
 • தரப்பினரின் பிரதி

மேலும், பின்வரும் ஆவணங்கள் உண்மைச்சான்றிதழின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அவை ஒவ்வொன்றிற்கும் ரூபா. 800.00 அறிவிடப்படும்.

 • சுகாதார சான்றிதழ்கள்
 • ஆய்வுகூட சான்றிதழ்கள்
 • ஆய்வு அறிக்கைகள்
 • தூய்மைச் சான்றிதழ்
 • தடுப்பக்காப்பு சான்றிதழ்கள்
 • இலவச விற்பனை சான்றிதழ்கள்
 • பண்பு மற்றும் தரச் சான்றிதழ்கள்
 • சத்தியக்கடதாசிகள் மற்றும் அட்டோனி நியமனப் பத்திரங்கள் (அவை உயர் நீதிமன்றத்தினால் கட்டாயமாக சான்றுப்படுத்தப்படல் வேண்டும்)
 • தரப்பினரின் பிரதி

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close