வெளிநாட்டு பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்

வெளிநாடுகளில் இருந்து பொலிஸ் தடைநீக்கச்சான்றை பெற்றுக்கொள்வதற்கான உதவி

தகுதி: வெளிநாடுகளில் ஏற்கனவே வசித்துள்ள இலங்கை பிரசை

பிரதானமாக சவூதி அரேபியா, குவைத், லெபனான், ஜோர்தான், அப்கனிஸ்தான், அபுதாபி, பாரெயின், ஓமான், தாய்லாந்து மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளில் இருந்தும்  ஏனைவை நாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தேவைகளுக்கு இணங்க  பொலிஸ் தடைநீக்கச் சான்றுகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

அவசியமான ஆவணங்கள் 

அபுதாபி

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று
 2. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்)
 3. வெளிநாட்டு அமைச்சு இலங்கை மற்றும் கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தால் உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 4. வீசா பக்கங்கள் உட்பட செல்லுபடியான கடவுச்சீட்டு(பக்கங்கள் 2,3,4 மற்றும் 5 ஒரு பக்கத்தில் காணப்படல் வேண்டும்) பிரதி
 5. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 6. எமிரேட்ஸ் அடையாள அட்டையில் பிரதி
 7. இரண்டு புகைபடங்கள்(6ஒ 4 செ.மீ)
 8. வெளிநாட்டு அமைச்சு இலங்கையில் செலுத்திய 220 அரபு எமிரேட்ஸ் டினாருக்கான பணப்பற்றுச்சீட்டு

பஹ்ரைன்

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று
 2. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்) அசல் கைவிரல் அடையாளத்துடன்
 3. நீல பின்புலத்துடன் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படமொன்று
 4. ஒரு டினார் அல்லது பாரெஹின் டினாருக்கு சமமான(03) மூன்று           அமெரிக்க டொலர்கள் இலங்கை வெளிநாட்டு அமைச்சில்  செலுத்தி பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டு பிரதி
 5. தற்போதைய மற்றும் பழைய கடவுச்சீட்டுகளின் பிரதிகள்
 1. முன்னைய வதிவிட அனுமதி மற்றும் மீள்நுழைவு வீசா பிரதிகள்
 2. பஹ்ரைனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கான உறுதிசெய்யப்பட்ட கடிதம்

ஜோர்தான்

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று
 2. வெளிநாட்டு அமைச்சு இலங்கையால் உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 3. வெளிநாட்டு அமைச்சு இலங்கையால் உறுதிசெய்யப்பட்ட தற்போதைய கடவுச்சீட்டின் பிரதி
 4. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 5. இரண்டு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்கள் வெள்ளை பின்புலத்துடன்
 6. நீங்கள் ஜோர்தானில் இருந்தமை தொடர்பில் ஆதாரத்தை நிரூபிக்கும் வேறு ஏதும் ஆவணங்கள்
 7. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்)

குவைத்

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று
 2. இலங்கை வெளிநாட்டு அமைச்சால்; உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 3. இலங்கை வெளிநாட்டு அமைச்சால் உறுதிசெய்யப்பட்ட தற்போதைய கடவுச்சீட்டின் பிரதி
 4. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 5. நான்கு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்கள் நீல பின்புலத்துடன்
 6. நீங்கள் குவைத்தில் இருந்தமை தொடர்பில் ஆதாரத்தை நிரூபிக்கும் வேறு ஏதும் ஆவணங்கள்

லெபனான்

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று
 2. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்)
 3. புதிய கடவுச்சீட்டின் பிரதி
 4. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 5. வெளிநாட்டு அமைச்சு இலங்கையால் உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை

ஓமான்

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று
 2. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்)
 3. இலங்கை வெளிநாட்டு அமைச்சால்; உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 4. வெளிநாட்டு அமைச்சு இலங்கையால் உறுதிசெய்யப்பட்ட தற்போதைய கடவுச்சீட்டின் பிரதி
 5. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 6. நான்கு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்கள்
 7. நீங்கள் ஓமானில் இருந்தமை தொடர்பில் ஆதாரத்தை நிரூபிக்கும் வேறு ஏதும் ஆவணங்கள்
 8. 39,400 ஓமான் ரியால்கள் இலங்கை வெளிநாட்டு அமைச்சில் செலுத்தி பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டு பிரதி

சவூதி அரேபியா

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று(ஆங்கிலத்தில்)
 2. வெளிநாட்டு அமைச்சு இலங்கை மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தால் உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 3. வெளிநாட்டு அமைச்சு இலங்கை மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தால் உறுதிசெய்யப்பட்ட தற்போதைய கடவுச்சீட்டின் பிரதி
 4. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 5. நான்கு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்கள்
 6. நீங்கள் சவூதி அரேபியாவில் இருந்தமை தொடர்பில் ஆதாரத்தை நிரூபிக்கும் வேறு ஏதும் ஆவணங்கள்

மாலைதீவு

 1. விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று
 2. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்)
 3. இலங்கை வெளிநாட்டு அமைச்சால்; உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 4. உறுதிசெய்யப்பட்ட தற்போதைய கடவுச்சீட்டின் பிரதி
 5. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 6. ஒரு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் வெள்ளை பின்புலத்துடன்
 7. 50 ருபியா இலங்கை வெளிநாட்டு அமைச்சில்  செலுத்தி பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டு பிரதி

ஆப்கனிஸ்தான்

1.விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று

 1. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்)
 2. இலங்கை வெளிநாட்டு அமைச்சால்; உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 3. இலங்கை வெளிநாட்டு அமைச்சால் தற்போதைய கடவுச்சீட்டின் பிரதி
 4. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 5. நீங்கள் அப்கனிஸ்தானில் இருந்தமை தொடர்பில் ஆதாரத்தை நிரூபிக்கும் வேறு ஏதும் ஆவணங்கள்

தாய்லாந்து

1.விண்ணப்பதாரியின் எழுத்துமூல வேண்டுகோளொன்று

 1. சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்(வழங்கப்படும்)
 2. இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள றோயல் தாய் தூதரகத்தால் உறுதிசெய்யபபட்ட வைவிரல் அடையாள அறிக்கை
 3. உறுதிசெய்யப்பட்ட கடவுச்சீட்டு
 4. முன்னைய கடவுச்சீட்டு இருப்பின் வீசா பக்கங்கள் உட்பட
 5. இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள்( 2 அங்குளம்)
 6. 100 பஹிட் இலங்கை வெளிநாட்டு அமைச்சில் செலுத்தி பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டு பிரதி
 7. பணி அனுமதியின் உறுதிசெய்யப்பட்ட பிரதி

ஹொங்கொங், சிங்கப்பூர், துபாய், கட்டார், ஜப்பான்,  ஆகிய நாடுகள்  மற்றும் ஏனைய நாடுகளின் வேண்டுகோளின் அடிப்படையில் பொலிஸ் தடைநீக்க சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள உதவியளிக்கப்படும்

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close