மரணத்திற்கான நட்டஈடு

தகைமை பெறுவோர் : புலம்பெயர் இலங்கைப் பணியாளர்கள்

விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் முறை : அவசியமான தகவல்களுடன் விண்ணப்பத்தை கொன்சியூலர் பிரிவில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்

விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும் இடங்கள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு
2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்,
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01

விண்ணப்பக் கட்டணம் : இலவசம்

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான நேரம் : 08.00 மணி – 15.00 மணி

இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்தப்படும் கட்டணம் : இலவசம்

சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் : சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை நீதிமன்றம் முடிவுறுத்தியவுடன் அல்லது வெளிநாட்டுத் தொழில் தருநர் சட்டரீதியான நிலுவைகளை செலுத்தியவுடன்

தேவையான துணை ஆவணங்கள்

அறிக்கையிடும் நிகழ்வுகளின் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைகள் வேறுபடுவதனால், விண்ணப்பதாரி / முறைப்பாட்டாளர் / உறவினர் விடயத்திற்குப் பொறுப்பான அலுவலரை அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சந்திக்க வேண்டும். குறித்த தகவலுக்காக, தொடர்புடைய குறித்துரைத்த தகவல்களைப் பார்க்கவும்.

விண்ணப்பப் படிவம் : முறைப்பாட்டுக்கான கோரிக்கைக் கடிதம் மாத்திரம் கோரப்படும்

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 1. நெருங்கிய உறவினரால் முறையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம்
 2. நட்டஈட்டுக் கோரிக்கைக் கடிதம்
 3. தொழில்தருநர் பற்றிய தகவல்கள்
 4. சேவை ஒப்பந்தம்
 5. கம்பனி அடையாள அட்டை
 6. காப்புறுதி விபரங்கள்
 7. வங்கி விபரங்கள்
 8. மருத்துவ அறிக்கைகள் (தேவையாயின்)

– வழக்குகளுக்காக 

 1. அற்றோனித் தத்துவம்
 2. சட்டரீதியான பின் உரித்தாளிச் சான்றிதழ்
 3. பாதுகாவலர் சான்றிதழ் (18 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் இருப்பின்)
 4. மன்னிப்புக் கடிதம் (கொலை வழக்கு)
 5. ஏனைய பொருத்தமான சட்ட ஆவணங்கள் (பிறப்புச் சான்றிதழ் / திருமணச் சான்றிதழ், ஏனையவை)

இறந்தவர் வழக்கொன்றில்; குற்றஞ்சாட்டப்பட்டவராக நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமாயின், நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு சாத்தியம் இல்லை.

கோரிக்கை செய்யப்படும் ஆவணங்கள் வழக்கு மற்றும் நாட்டிற்கு அமைவாக காணப்படும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close