1931 ஜுன் மாதம் இலங்கை அரச சபைக்கான (ஒற்றை சட்ட மன்றம்) முதலாவது தேர்தலில், சட்ட மன்றத்திற்கு 50 பேரை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையானது அதன் சுதந்திரத்திற்கு முன்னதாகவும் மற்றும் ஏனைய பல நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உலகளாவிய வாக்களிக்கும் தகுதியினை (வாக்குரிமை) வழங்கி ஆசியாவில் பழைமையான ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது.
மைல்கற்கள்
மைல்கற்கள்
5 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குக்கு மேற்படாத ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியைப் பெறத் தகுதியுடையது என்பதை தெரிவிக்கும் இலவச கல்விக் கொள்கை 1945 ஒக்டோபர் 1 ஆந் திகதி நடைமுறைக்கு வந்தது. இக் கொள்கை மாணவச் சந்ததிகளுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், உலகளாவிய ஆரம்ப கல்வியின் மில்லேனிய அபிவிருத்தி இலக்கினை எய்துவதற்கு இலங்கைக்கு வழிவகுத்துள்ளது.
1947 மே மாதம் அவுஸ்திரேலியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1948 பெப்ரவரி 4 ஆந் திகதி சிலோன் இலங்கை டொமினியன் அந்தஸ்துடைய சுதந்திரத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் பொதுநலவாயத்தினுள் 1972 மே 22 இல் அதன் பிறகு 24 ஆண்டுகளுக்கு டொமினியன் அந்தஸ்து எனும் நிலை தொடர்ந்ததுடன், குடியரசாக மாற்றம் பெறும் வரை இலங்கைக் குடியரசாக மீளப் பெயரிடப்பட்டது.
உயர் ஸ்தானிகராலயத்தின் இன்றைய தோற்றம்.
1948 ஒக்டோபர் 27 ஆந் திகதி பிரான்ஸ் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
சிலோன் சேர் க்ளெவுட் கொரயா அவர்களை தூதுவராகக் கொண்டு வாஷிங்டன் நகரில் தூதரகம் திறக்கப்பட்டதுடன், 1949 ஒக்டோபர் 29 ஆந் திகதி ஐக்கிய அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.
மியன்மார் யூனியன் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1970 சுவீடன் இராச்சியத்துடனான இராச தந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூக – பொருளாதார அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்புக்கான பேரவையாக ‘கொழும்பு திட்டம்” (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பொருளாதார அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான கொழும்புத் திட்டம்) கருக்கொண்ட மாநாடாக 1950 ஜனவரி மாதம் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான கொழும்பு பொதுநலவாய மாநாடு இடம்பெற்றது.
1950 ஒக்டோபர் நோர்வே இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டது.
1950 பெப்ரவரி 22ஆம் திகதி திறக்கப்பட்ட இஸ்லாமாபாத்திலுள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் தற்போதைய நிலை.
1951 ஜுலை 1 ஆந் திகதி கொழும்புத் திட்டம் அங்குரார்பணம் செய்யப்பட்டது. புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் 1977 இல் அதன் பெயர் ‘ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான கொழும்புத் திட்டம்” ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் அசல் 7 உறுப்பினர்களிலிருந்து அதன் செயற்பாடுகளின் நோக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உறுப்புரிமையை பிரதிபலிப்பதாக இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
பிராந்தியத்திலும், உலகின் பல பாகங்களிலும் உயர் சமூக அபிவிருத்தி சுட்டிகளை அடைந்து கொள்வதற்கு இலங்கைக்கு வழியமைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளின் பொதுச்சுகாதார தாதியர்கள் மற்றும் சுகாதார கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கலாக அடிப்படை மட்ட வேலையாட்களை கொண்ட முறைமையான இலவச சுகாதாரக் கொள்கையைப் பின்பற்றல்.
1953 டிசம்பர் 9 ஆந் திகதி ஜேர்மனி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கையினால் 1954 ஏப்ரல் 28 முதல் மே 2 ஆந் திகதி வரை கொழும்பு பவர்ஸ் மாநாடு நடாத்தப்பட்டது. இது ஆசிய – ஆபிரிக்க ஒருமைப்பாட்டுக்கான உந்துதலை அளிக்கும் வகையிலும், 1955 பண்டுங் மாநாட்டிற்கு வழிகோலும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையுடன் (முன்னர் சிலோன்) சேர்ந்து ஆசியா மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 நாடுகள் ஆபிரிக்க – ஆசிய ஒற்றுமை குறித்து கலந்துரையாடல் மற்றும் அணிசேரா இயக்கத்திற்கான அடித்தளத்தை நிலைநாட்டுவதற்காக 1955 ஏப்ரல் மாதம் இந்தோனேஷியாவின் பண்டுங் நகரில் ஒன்றுகூடின.
இலங்கை, அப்போதைய சிலோன் மற்றைய ஒன்பது நாடுகளுடன் சேர்ந்து 1955 டிசம்பர் 14 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முதலாவது ஐ.நா வுக்கான நிரந்தர பிரதிநிதி சேர் செனரத் குணவர்தன நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.
1955 நவம்பர் மாதம் தாய்லாந்து இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.
1956 ஜுன் மாதம் 1 ஆந் திகதி இஸ்ரேலுடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.
1953 இல் ஐக்கிய அமெரிக்காவுக்கான தூதுவராக சேர் செனரத் குணவர்தன நியமிக்கப்பட்டதுடன், 1955 ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் அரசாங்கத்தின் கண்காணிப்பாளராக சேவையாற்றினார். 1956 இல் ஐக்கிய நாடுகளுக்கான முதலாவது பிரதிநிதியாக நியமனங்களை வழங்கினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கையின் முதலாவது அரசத் தலைவராக அப்போதைய பிரதமராகவிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க திகழ்கிறார். 11 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ‘எனது நாடு மிகச்சிறியது, பலவீனமானதும், வறுமையானதுமான ஒரு நாடாகும். ஆனால், இன்று நான் துணிகரமாகச் சிந்திக்கையில், குறிப்பாக இத்தகைய அமைப்பினுள் ஒரு நாட்டினாலும், அதன் உறுப்பினரினாலும் வழங்கப்படக்கூடிய சேவையானது அந் நாட்டின் அளவிலோ, அதன் சனத்தொகையிலோ, அதன் அதிகாரத்திலோ…Read More
1957 பெப்ரவரி 7ஆந் திகதி சீனாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1957 ஜுலை 1ஆந் திகதி நேபாள இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன. (நேபாளமானது 2017 ஜுன் மாதம் கூட்டாட்சி ஜனநாயக குடியரசாக மாறியது)
1957 பெப்ரவரி 19ஆந் திகதி சோவியத் ஒன்றியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1960 ஜுலை 21 ஆந் திகதி உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 26 ஆவது அமர்வில் அவர் உரையாற்றினார்.
1960 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினராக சிலோன் தெரிவு செய்யப்பட்டது. சிலோனிலிருந்து சேர் க்ளெடி கொரயா அவர்கள் 1960 மே மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின முதலாவது தலைவரானார்.
கொங்கோ ஜனநாயக குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு ஆறு அமைதிகாப்பாளர்களை ஈடுபடுத்தியதனூடாக 1960 இல் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் நடவடிக்கைக்கு இலங்கை அதன் முதலாவது பங்களிப்பை வழங்கியது.
ஐரோப்பிய ஆணைக்குழுவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1956 ஜுலை 26 ஆந் திகதி மாலைதீவு குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் யூ தான்ட் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது 1967 ஏப்ரல் 10 ஆந் திகதி கொழும்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கட்டிடம் திறக்கப்பட்டது.
1970 ஜுலை 27 ஆந் திகதி சிங்கப்பூர் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1971 பெப்ரவரி 19 ஆந் திகதி குவைத்துடனான இராசதந்திர உறவுகள்
எத்தியோப்பியா ஜனநாயக கூட்டாட்சி குடியரசுடனான இராசதந்திர உறவுகள்
சமுத்திரங்களின் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 3 ஆவது மாநாட்டின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த ஹெமில்டன் ஷெர்லி அமரசிங்க நியமிக்கப்பட்டார். இந்த மாநாடானது, உலக சமுத்திரங்களைப் பயன்படுத்தும் தேசங்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை தீர்மானிக்கும் முக்கிய ஆவணமான சமுத்திர சட்ட சாசனத்தை ஏற்படுத்த வழிவகுத்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 31 ஆவது அமர்வில் இலங்கையின் முதலாவது தலைவராக 1976 ஆம் ஆண்டு எச்.ஷேர்லி அமரசிங்க நியமிக்கப்பட்டார்.
1977 நவம்பர் மாதம் 14 ஆந் திகதி கொரியக் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு.
அணு ஆயுதங்கள், சிறிய ஆயுதங்கள் மற்றும் புறநிலை ஆயுதச் சண்டைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஆயுத களைவு தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின் விசேட அமர்வினை முதல் முறையாக இலங்கை முன்மொழிந்தது.
1979 ஜுன் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
பாரம்பரிய நகரமான பொலன்னறுவை, பாரம்பரியமிக்க சிகீரியா நகரம் மற்றும் புனித நகரான அனுராதபுரம் போன்ற இலங்கையின் மூன்று கலாச்சாரத் தளங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன. இன்று, தம்புள்ளை தங்க விகாரை(1991), காலியின் பழைய நகரம் மற்றும் அதன் வலுவூட்டல்கள்(1988) மற்றும் புனித கண்டி நகரம் (2010) ஆகியவையும், இலங்கையின் மத்திய மலைநாடுகள்(2010) மற்றும் சிங்கராஜா வனவளம்(1988) ஆகிய 2 இயற்கைத் தளங்கள் உள்ளடங்கலாக 6 கலாச்சாரத் தளங்கள்…Read More
1985 டிசம்பர் 8ஆந் திகதி டாக்கா நகரில் SAARC பட்டயமானது 7 உறுப்பினர்களுடன் கைச்சாத்திடப்பட்டதுடன், இதனூடாக பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை காணப்படுகிறது.
1992 நவம்பர் மாதம் நெதர்லாந்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
தென்னாபிரிக்க குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.