'உலகின் நீல மாணிக்க தலைநகரைப் பார்வையிட வாருங்கள்' - ஷாங்காய், சீனா சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன

 ‘உலகின் நீல மாணிக்க தலைநகரைப் பார்வையிட வாருங்கள்’ – ஷாங்காய், சீனா சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன

2022 நவம்பர் 10ஆந் திகதி நடைபெற்ற சீனா சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்ற தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, நிகழ்வில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள், தீவின் அற்புதமான விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களை வாங்கும் தமது கனவை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், அதன் ஒப்பற்ற சுற்றுலாத் தலங்களை அனுபவிப்பதற்காக இலங்கைக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார். மன்னர்கள், ராணிகள் மற்றும் இளவரசிகள் இலங்கையின் அற்புதமான இரத்தினங்களால் தங்களை இன்னும் அலங்கரித்துக் கொள்வதுடன், மிகப்பெரிய இரத்தினங்கள் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலதரப்பட்ட விலைமதிப்புள்ள வண்ணக் கற்களை உற்பத்தி செய்து வருகின்ற இலங்கை, அதைத் தொடர்ந்தும் செய்து வருகின்றது. இன்று, உலகின்  நீல மாணிக்கத்தின் தலைநகராக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அரசாங்க ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் ஷாங்காய் இரத்தின மற்றும் இரத்தினப் பரிமாற்றப் பிரதிநிதிகள் உட்பட சீன தொழில்துறையினர் கலந்து கொண்டனர். பேச்சாளர்களில் ஷாங்காய் மக்கள் அரச குய்யு, தர அபிவிருத்திக்கான சீன சபைத் தலைவர் லியு பிங்ஜுன் இடம்பெற்றிருந்ததுடன், முக்கிய சர்வதேச பேச்சாளர்களில், ப்ளூ புக்ஸ் குறித்து விரிவாகப் பேசிய கொன்ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் கொமன் ஸ்டாண்டர்ட்ஸ் தலைவர் கெய்டானோ கவாலியேரி, கலர்டு ஸ்டோன் அசோசியேஷனின் கிளமென்ட் சபாக் மற்றும் ஆசியான் இரத்தின மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றனர்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

 

2022 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close