ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தோனேசிய குடிவரவு பொலிடெக்னிக்கிற்கான திட்டத்தை ஏற்பாடு

ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தோனேசிய குடிவரவு பொலிடெக்னிக்கிற்கான திட்டத்தை ஏற்பாடு

ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இந்தோனேசிய குடிவரவு பொலிடெக்னிக்குடனான ஊடாடும் நிகழ்வொன்றை 2022 நவம்பர் 11ஆந் திகதி தூதரக வளாகத்தில்  வெற்றிகரமாக நடாத்தியது. தொழில்முறை கல்வியை ஒழுங்கமைக்கின்ற உயர்கல்வி நிறுவனமான குடிவரவு பொலிடெக்னிக், முதன்மையாக குடியேற்றத் துறையில் நிபுணத்துவம் மற்றும் அறிவைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடிவரவு பொலிடெக்னிக் மூலம் பயிற்சி பெற்ற நபர்கள் இந்தோனேசியா முழுவதும் உள்ள குடிவரவு அலுவலகங்களில் அல்லது இந்தோனேசியாவின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் குடிவரவுப் பிரிவுகளில் இணைக்கப்படுவார்கள்.

குடிவரவு பொலிடெக்னிக்கின் கேடட்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இந்தோனேசியாவில் உள்ள இலங்கை சமூகத்திற்கு இலங்கை முதலீடுகள் மற்றும் தூதரகத்தால் வழங்கப்படும் தூதரக சேவைகள் குறித்து தூதரகம் அவர்களுக்கு விளக்கமளித்தது. இந்தோனேசியாவில் உள்ள நுழைவுத் துறைமுகங்களில் இலங்கையர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு உதவுமாறு இந்தோனேசிய குடிவரவுத் துறையிடம் தூதரகம் ஆதரவைக் கோரியது. இலங்கை சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் உணவு வகைகள் பற்றிய விழிப்புணர்வையும் தூதரகம் இதன்போது ஏற்படுத்தியது.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2022 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close