துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எஸ். ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க மத்திய  கிழக்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் விஜயம் செய்து, தொல்பொருள் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடினார்.

குடியேற்ற தொல்லியல் துறையின் தலைவர் பேராசிரியர் டெனிஸ் புர்கு எர்சியாஸ்  மற்றும் இணைக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இரு நாடுகளினதும் பொருளாதாரத்திற்கும் கணிசமான வருவாயைக் கொண்டு வரும் பாரம்பரிய சுற்றுலாவில் இரு நாடுகளும் அதிக கவனம் செலுத்துகின்றன என்பதன் அடிப்படையில் இந்த குறிப்பிட்ட விஜயம் மற்றும் கலந்துரையாடல் அமைந்தது.

இலங்கையில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளங்கள் எட்டில் (08) ஆறு (06) தொல்பொருள் மற்றும் கலாச்சார மரபுகளாகும் எனக் குறிப்பிட்ட, தொல்லியல் துறையில் வலுவான கல்விப் பின்னணியைக் கொண்ட தூதுவர் திஸாநாயக்க, இலங்கையின் தொல்பொருள் பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவம், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளில் முன்னோடியாக இருந்ததுடன், தொல்பொருள் அறிவு அதன் சுற்றுலாத் துறைக்கு எவ்வாறு மகத்தான பங்களிப்பை வழங்குகின்றது என்பதை விளக்கினார். துருக்கி அதன் தொல்பொருள் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காக பொறிக்கப்பட்ட 17 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தொல்லியல் துறை மாணவியாக, துருக்கியில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த தொல்பொருள் மரபுகளில் அதிக ஆர்வம் உள்ளதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தகைய பாரம்பரிய தளங்களில் பல நூற்றாண்டுகளாக கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் செல்வாக்கு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரம்பரிய தளங்கள் குறித்த ஆழமான அறிவைக் கொண்ட சுற்றுலா வழிகாட்டிகளின் சுற்றுலாப் பங்களிப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தொல்லியல் துறையில் இளம் பட்டதாரிகள் மத்தியில் சுற்றுலா வழிகாட்டும் தொழிலுக்கான தேவையை அதிகரிக்க வேண்டிய அவசியம் முக்கியமானது என புரிந்து கொள்ளப்பட்டது. ஓரிரு மாதங்களுக்கான கோடைக் கள முகாம்கள் மூலம் மாணவர்களை பரிமாறிக் கொள்வது இளைஞர்களின் புரிதலை விரிவுபடுத்துவதோடு மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

இலங்கையில் தொல்லியல் கற்பிக்கப்படும் அனைத்து பல்கலைக்கழகங்களும் பொதுப் பல்கலைக்கழகங்களாகவும், மத்திய கிழக்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் துருக்கியில் உள்ள பொதுப் பல்கலைக்கழகமாகவும் இருப்பதால், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான நீண்டகால பரிமாற்றத் திட்டங்களுக்கு நிதியளிப்பது எளிதானது அல்ல என்பதுடன், அகழ்வாராய்ச்சித் தளங்களில் நடைமுறை வெளிப்பாடு மற்றும் இரு முனைகளிலும் இருக்கும் வசதிகளால் மூடப்பட்டிருக்கும் சில பல்கலைக்கழக அனுபவங்களுடன் குறுகிய கால பரிமாற்றங்களைப் பார்க்கத் தொடங்குவதற்கு இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

துருக்கி மற்றும் துருக்கிய எயார்லைன்ஸில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர்களுடன் ஒத்துழைப்பது சாத்தியமாகலாம் என்றும், அத்தகைய முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான புதுமையான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் தூதுவர் பரிந்துரைத்தார். இலங்கை உட்பட தெற்காசியா பற்றிய அறிவு துருக்கிய இளங்கலைப் பட்டதாரிகளுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது என துருக்கிய கல்வியாளர்கள் குறிப்பிட்டது போல் தொல்லியல் துறையில் மட்டுமல்லாது, ஏனைய பாடங்களிலும் கூட பல்வேறு நோக்கங்களுக்காக வருகை தரும் இலங்கை கல்வியாளர்கள் இலங்கை குறித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அவர் மேலும் பரிந்துரைத்தார்.

இந்தச் சூழலில் அங்காராவில் உள்ள ஏனைய தெற்காசியத் தூதரகங்கள் உடன்பட்டால், தெற்காசிய தினத்தை ஏற்பாடு செய்வதாக தூதுவர்ர் முன்மொழிந்தார். எவ்வாறாயினும், இலங்கையின் கலை, கட்டிடக்கலை மற்றும் தொல்பொருள், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் அரசியல் அம்சங்கள் மற்றும் இலங்கை உணவு, திரைப்படம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் மூலம் இலங்கையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு குறித்த அறிமுக விளக்கக்காட்சியுடன், இலங்கை தினத்தை ஏற்பாடு செய்வதற்கு தூதுவர் விருப்பம் தெரிவித்தார்.

 

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2023 ஜனவரி 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close