இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்

 இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், 2023 ஜனவரி 19-20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஏனைய பிரமுகர்களையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் இணைச் செயலாளர் (இந்து சமுத்திரப் பிராந்தியம்) புனித் அகர்வால், பணிப்பாளர் சந்தீப் குமார் பையாப்பு, துணைச் செயலாளர் (இலங்கை) நிதி சௌத்ரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் துணைச் செயலாளர் ரகூ பூரி ஆகியோரும் உடன் இணைந்து விஜயம் செய்யவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஜனவரி 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close