மியான்மரிலுள்ள இந்திய தூதர் வினய் குமார் விடுத்த அழைப்பின் பேரில், மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் 2023 செப்டம்பர் 24, அன்று யாங்கூனில் உள்ள அறுகோண மையத்தில், நடைபெற்ற "கணேஷ் உத்சவ்", கலாச்சார நிகழ்வில் பங்கேற்றது.
நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தின் அனுசரணையில், "ஒரே பூமி - ஒரே குடும்பம்" என்ற கருப்பொருளில், யாங்கூனிலுள்ள மோரியா இந்திய கழகத்தினால், கலாச்சார இரவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை நடனக் கலைஞர்கள், "மயூர வண்ணம ", நடனத்தை அரங்கேற்றினர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற, பிரபலமான "லோவே செமா" பாடல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியா, நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரமுகர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை தூதரகம்
யாங்கோன்
26 செப்டம்பர் 2023