உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளின் நிலை குறித்து ஆய்வு

உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளின் நிலை குறித்து ஆய்வு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை 2023 ஜனவரி 31ஆந் திகதி புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், கலாநிதி ஜெய்சங்கரின் சமீபத்திய இருதரப்பு விஜயத்தின் மூலம் வெளிவரும் வழிகள் மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

ஜனவரி 20ஆந் திகதி, கலாநிதி ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய அவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான இணைச் செயலாளர் புனித் அகர்வால் மற்றும் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுர்க கதுருகமுவ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2023 பிப்ரவரி 01

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close