பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ரீதிஸ்ரீ விஜேரத்ன மெண்டிஸ் தனது கடமைகளை பொறுப்பேற்பு

பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ரீதிஸ்ரீ விஜேரத்ன மெண்டிஸ் தனது கடமைகளை பொறுப்பேற்பு

பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ரீதிஸ்ரீ விஜேரத்ன மெண்டிஸ் 2023 ஜனவரி 30ஆந் திகதி இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரீதிஸ்ரீ விஜேரத்ன மென்டிஸ் பஹ்ரைனில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் எளிமையான முறையில் இடம்பெற்ற வைபவத்துடன் பணிகளை ஆரம்பித்தார். இந்நிகழ்வில் இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளான கிரிபத் (பாற்சோறு), கெவும் மற்றும் கொக்கிஸ்களும் பரிமாறப்பட்டன.

பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய தூதுவர், இலங்கைக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியல், பொருளாதாரம், கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்பு ஆகியவற்றின் அடித்தளத்தில் பணியாற்றுவதற்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தி குறித்த தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் குறித்து உரையாற்றிய தூதுவர், இலங்கைத் தூதரகம் ஆற்றிய பொருளாதார இராஜதந்திரத்தின் பங்கை வலியுறுத்தினார்.

தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள விஜேரத்ன மெண்டிஸ், இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறிப்பாக கவனம் செலுத்தி, பஹ்ரைனில் உள்ள இலங்கை சமூகத்திற்கு கொன்சியூலர் மற்றும் நலன்புரி சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

1996ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்த தூதுவர் ரீதிஸ்ரீ விஜேரத்ன மென்டிஸ், முன்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்கள், கொன்சியூலர் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் (செயற்றிறன்) பிரிவின் மேலதிக செயலாளராக பணியாற்றியுள்ளார்.

இலங்கைத் தூதரகம்

மனாமா

2023 பிப்ரவரி 01

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close