சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் 2021 டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் உயர்ஸ்தானிகராலயத்தின் சான்சரி வளாகத்தில் விடேட கொன்சியூலர் முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விஷேட முகாமில் திருச்சி கோட்டப்பட்டு, திண்டுக்கல் தொட்டநூத்து, திருநெல்வேலி போகநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலங்கையர்களுக்கு 47 பிறப்புச் சான்றிதழ்களும், 20 குடியுரிமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக, சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் விஷேட கொன்சியூலர் முகாம்கள் வழக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவிட் தொற்றுநோய் நிலைமையின் காரணமாக, மார்ச் 2020 இல் இது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் தென்னிந்தியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு இத்தகைய முகாம்களின் மூலம் வழங்கப்பட்ட மகத்தான சேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பேணி, தூதரகம் இந்த முகாம்களை மீண்டும் 2021 அக்டோபர் முதல் ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2021 டிசம்பர் 31