ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையின் சாகச சுற்றுலாவை வெளிப்படுத்தும் கண்காட்சி டிசம்பர் 27ஆந் திகதி அம்மானில் உள்ள கெலெரியா மோலில் நடைபெற்றது. ஜோர்தானில் ஒரு சின்னமான அடையாளமாகக் கருதப்படும் மிகப்பெரிய, உயர்தர கடைத்தொகுதி மோல்களில் ஒன்றான கெலெரியா மோல், கிறிஸ்மஸ் விடுமுறையின் போது கணிசமான மக்களை ஈர்க்கின்றது.
சாகச விளையாட்டுக்களான உலாவல், வெள்ளை நீர் ராஃப்டிங், சூடான காற்று பலூனிங், ஜோர்தானில் இல்லாத ஸிப் புறணி, கடல் பாலூட்டிகளுடனான ஆழ்கடல் நீச்சல் மற்றும் வனவிலங்குப் பூங்காக்களிலான இயற்கை வாழ்விட சாகசங்கள் போன்ற சாகச விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இலங்கையின் இயற்கைக் காட்சிகள் இந்தக் கண்காட்சியில் சித்தரிக்கப்பட்டன.
சுற்றுலா ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக, சிலோன் தேயிலை, சிலோன் அராபிகா கோப்பி, இயற்கை ரப்பர் உற்பத்திகள், இயற்கை ரப்பரில் இருந்து பெறப்பட்ட உடலாரோக்கிய உற்பத்திகள், இயற்கையான தேங்காய் உற்பத்திகள், தென்னை நார் உற்பத்திகள், இயற்கை சவர்காகர உற்பத்திகள் போன்ற இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள், நேச்சர்ஸ் சீக்ரெட், பரக்கா கொஸ்மெடிக்ஸ், ஸ்பா சிலோன் போன்ற இலங்கையின் அழகுசாதனப் பொருட்கள், முருங்கை மற்றும் சோர்சுப் போன்ற உணவுப் பொடிகள், இலங்கையின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், தங்கொட்டுவ பீங்கான் போன்றன இதன்போது காட்சிப்படுத்தப்பட்டன.
இலங்கைத் தூதரகம்,
ஜோர்டான்
2021 டிசம்பர் 30