சமூக உறுப்பினர்கள் மற்றும் சீன நண்பர்களுடன் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

சமூக உறுப்பினர்கள் மற்றும் சீன நண்பர்களுடன் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

2021 டிசம்பர் 25ஆந் திகதி பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. இலங்கை சமூக உறுப்பினர்கள், சீன நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் ஆலோசகர் பிரிகேடியர் சில்வெஸ்டர் பெரேராவின் ஆரம்ப பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானதுடன், அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தூதுவர் கலாநிதி பாலித கொஹொன வரவேற்புரை ஆற்றினார். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அமைதி, அன்பு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக தூதுவர் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய் பொருளாதாரத்தின் அளவு மற்றும் மக்கள் தொகையைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதித்துள்ளது. விசேடமாக, கோவிட்-19 இன் விளைவாக இலங்கை கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாம் முன்னர் செய்ததைப் போல இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என அவர் குறிப்பிட்டார். முதலீடுகளை ஈர்ப்பதிலும், சீனாவுக்கான இலங்கை ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் தூதரகம் முக்கிய பங்காற்றி வருகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார். முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இலங்கையை தமது விருப்பமான இடமாகக் கருதுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சீன எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் மேலும் பல சீன நண்பர்கள் இலங்கைக்கு வருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தூதரகத்தின் பிரகாசமான விளக்குகள் காற்றில் குளிர்ச்சியுடன் கிறிஸ்மஸின் சூழலையும் உணர்வையும் நீட்டின. தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் கிறிஸ்மஸ் பாடல்கள் இசைக்கப்பட்டன.

சண்டா கிளவுஸ் சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கியதன் மூலம் நிகழ்வு மேம்படுத்தப்பட்டது. அனைத்து விருந்தினர்களுக்கும் இலங்கை இரவு விருந்து வழங்கப்பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 டிசம்பர் 30

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close