எம்.டி.சி. வெளிநாட்டு பல்பொருள் அங்காடிச் சங்கிலி வியன்னாவில் புதிய விற்பனை நிலையத்தைத் திறந்துள்ள நிலையில், இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான மஜிந்த ஜயசிங்க 2021 நவம்பர் 6ஆந் திகதி சனிக்கிழமையன்று எம்.டி.சி. வெளிநாட்டு பல்பொருள் அங்காடியைத் திறந்து வைத்தார். சான்சரியினள் தலைவர் திரு. சரித்த வீரசிங்க மற்றும் ஆலோசகர் ஆகியோரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
எம்.டி.சி. வெளிநாட்டு பல்பொருள் அங்காடிகள் என்பது ஒஸ்ட்ரியாவின் வியன்னாவில் பல்வேறு வகையான ஆசிய மற்றும் ஆபிரிக்க உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பிரபலமான பல்பொருள் அங்காடிச் சங்கிலியாகும். நன்கு நிறுவப்பட்ட இந்த சில்லறை விற்பனை நிறுவனம் ஒஸ்ட்ரிய மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் வலுவான தளத்தைக் கொண்டுள்ளதுடன், இது இலங்கை உற்பத்திகளை நிலைநிறுத்துவதற்கான சிறந்த தளத்தை வழங்கும் அதே வேளை, அவற்றின் சந்தை வகிபாகத்தை அதிகரிக்கின்றது.
வியன்னாவின் வெளி மாவட்டங்களில் அமைந்துள்ள எம்.டி.சி. பல்பொருள் அங்காடியில் இலங்கை உற்பத்திகள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அரிசி, பிஸ்கட், சுவையூட்டிகள், ஜேம், இயற்கை தேங்காய் பால், இயற்கை தேங்காய்த் தண்ணீர், அதிகமான வேர்ஜின் தேங்காய் எண்ணெய் பிரீமியம், பதிவு செய்யப்பட்ட பொருட்கள், மா, நூடுல்ஸ், டிரிக்கிள், காரக் கலவை, சம்பல் மற்றும் சிலோன் டீ போன்ற பலதரப்பட்ட பொருட்கள் வியன்னாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய பல்பொருள் அங்காடியில் உள்ளன.
இந்த பல்பொருள் அங்காடிச் சங்கிலியுடன் தூதரகம் ஏற்கனவே கடந்த ஆண்டு வர்த்தக இணைப்புக்களை உருவாக்கியிருந்ததுடன், இந்த பல்பொருள் அங்காடிச் சங்கிலியின் விரிவாக்கம் காரணமாக எதிர்காலத்தில் இலங்கை உற்பத்திகளுக்கு அவர்கள் வழங்குகின்ற வரம்பிலான இறக்குமதி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது.
இலங்கைத் தூதரகம்,
வியன்னா
2021 நவம்பர் 10