அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தீபங்களின் திருவிழாவான தீபாவளிக் கொண்டாட்டம்

 அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தீபங்களின் திருவிழாவான தீபாவளிக் கொண்டாட்டம்

தீபங்களின் திருவிழாவான தீபாவளியை அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 நவம்பர் 08ஆந் திகதி தூதரக வளாகத்தில்  கொண்டாடியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிலவும் கோவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக அபுதாபியில் உள்ள இலங்கை இந்து சமூகத்தைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான இந்து பக்தர்களும், தூதரக ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தூதரக வளாகம் மலர்களாலும், கோலம்' எனப்படும் தீபாவளி வடிவங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்திகளால்  ஒளிரச் செய்யப்பட்டது. நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக, இலங்கைப் பாரம்பரியத்தை பின்பற்றி எண்ணெய் விளக்கை ஏற்றிவைக்கும் நிகழ்வு தூதுவர் மற்றும் அதிதிகளினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்து சமய வழிபாடுகளை நடாத்திய குருக்கள் வெங்கட சுப்ரமணியன், இலங்கைத் தூதுவர், பணியாளர்கள், பங்கேற்பாளர்கள்  மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு மல்ராஜ் டி சில்வா தனது உரையில் தீபாவளியைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், அமைதி, நல்லிணக்கம், தீமையின் மீதான நன்மையின் வெற்றி, இருளின் மீதான ஒளி  மற்றும் அறியாமையின் மீதான அறிவு ஆகியவற்றின் செய்தியை தீபாவளிப் பண்டிகையின் அடையாளமாக தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.

விழாவின் நிறைவில், அழைப்பாளர்கள் அனைவருக்கும் விஷேட தீபாவளி இனிப்புக்கள் மற்றும் பாரம்பரிய இந்து உணவு ஆகியன  வழங்கப்பட்டது.

இலங்கை தூதரகம்,

அபுதாபி

2021 நவம்பர் 10

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close