2020 நவம்பர் 11ஆந் திகதி நடைபெற்ற இலங்கையிலான இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா. வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் நிகழ்த்திய உரை

2020 நவம்பர் 11ஆந் திகதி நடைபெற்ற இலங்கையிலான இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா. வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் நிகழ்த்திய உரை

 
ஆயுபோவன்!

தலைவர் அவர்களே,
மேன்மை தங்கியவர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே,

இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உலகளாவிய வலையமைப்பின் இலங்கைக்கான அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் தொடக்க உரையை நிகழ்த்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். தொடக்க உரையை நிகழ்த்துவதற்காக என்னை அழைத்தமைக்காக இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் கௌரவ. ஹனா சிங்கர் மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் திரு. சரத் டேஷ் ஆகியோருக்கு எனது அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உலகளாவிய வலையமைப்பானது, உறுப்பு நாடுகளுக்கு பயனுள்ளதும், சரியான நேரத்திலான மற்றும் ஒருங்கிணைந்த கணினி அளவிலான ஆதரவை உறுதி செய்வதற்குமாக இடம்பெயர்வு குறித்த ஒரு வலையமைப்பை நிறுவுகின்றது. தனது ஆணையை நிறைவேற்றுவதில், புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சமூகங்களின் இலக்கு, தோற்றம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கு இந்த வலையமைப்பு முன்னுரிமை அளிக்கின்றது. மிக முக்கியமாக, ஒரு பொதுவான ஐ.நா. அமைப்பு அணுகுமுறையானது பெறுமதியை சேர்க்கும் அதே வேளை, அதன் முடிவுகளையும் தாக்கத்தையும் உடனடியாக அளவிடக்கூடிய பிரச்சினைகளுக்கு இது முக்கியத்துவம் அளிக்கின்றது.

2018ஆம் ஆண்டில் இலங்கை, ஏனைய ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் அளித்தது. சர்வதேச இடம்பெயர்வுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய கூறுகளையும் விரிவாகக் கைப்பற்றுவதற்கான முதல் வெற்றிகரமான முயற்சி இதுவாகும். இந்த வலையமைப்பை, குறிப்பாக இந்தக் கட்டத்தில் தொடங்குவது நாட்டிற்கு ஒரு மதிப்புமிக்க வளமாக இருக்கும் என இலங்கை அரசாங்கம் நம்புகின்றது. பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை இது பலப்படுத்தும் என நாங்கள் நம்புகின்றோம்.

உலக மக்கள் தொகையில் 270 மில்லியன் தொகையிலான சர்வதேச புலம்பெயர்ந்தோரின் சதவிகிதம் 3.5% ஆகும். இதில் 60% ஆனோர் தொழில் சார் குடியேறிகளாவர். இந்த தொழில் சார் குடியேறிகளின் குறிப்பிடத்தக்க சமூகப் பொருளாதார பங்களிப்புக்களை நிரூபிப்பதற்கான ஏராளமான சான்றுகள் உண்மையில் புலம்பெயர்ந்த நாடுகளிடமும், அவர்களது பிறப்பிட நாடுகளிடமும் உள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஆண்டுக்கு சுமார் 200,000 பேர் வெளியேறும் விகிதத்துடன் சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் பணி புரிவதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த வெளிநாடுகளிலுள்ள இலங்கைகளில் சுமார் 800,000 பேர் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பணி புரிகின்றார்கள்.

1985 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிறுவப்பட்டது முதல், இலங்கை பல ஆண்டுகளாக ஒரு நல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிர்வாக முறைமையை உருவாக்கியுள்ளது. நிர்வாக மற்றும் சட்ட விதிமுறைகள், சட்டங்கள் மற்றும் சேவைகள் இருந்தபோதிலும், இலங்கை இந்தத் துறையில் தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொள்கின்றது. பாதுகாப்பு, குறைந்த ஊதியம் மற்றும் அதிக சார்புடைய குறுகிய இடங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களுடன் பெண் தொழிலாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் குறைந்த திறமையான பிரிவுகளில் தொழிலாளர் இடம்பெயர்வின் செறிவான விகிதமானது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

பத்து ஆண்டு அபிவிருத்தித் திட்டமும், ஒழுக்கமான பணிக்கான தேசிய செயற்றிட்டமும் பொருளாதாரத்திற்கான தொழிலாளர் இடம்பெயர்வின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளன. வெளிநாட்டு தொழிலாளர் இடம்பெயர்வுக்கு வழிகாட்டும் இந்தத் திட்டம், 'பாதுகாப்பான, திறமையான இடம்பெயர்வினை' அடிப்படை மூலோபாயமாக எடுத்துக்காட்டுகின்றது. 2017 பெப்ரவரியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக ஒரு தனியான அமைச்சாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சினை உருவாக்கியமை இலங்கையில் தொழிலாளர் இடம்பெயர்வுக்காக ஒதுக்கப்பட்ட முன்னுரிமையின் மற்றுமொரு அறிகுறியாகும். ஆயினும்கூட, குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை விட்டுச்செல்லும் தாக்கத்தின் அடிப்படையில் இடம்பெயர்வுக்கான சமூக செலவுகள் பலரால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் இடையிலான நுட்பமான சமநிலையைப் பேணுவதென்பது தொடர்ச்சியான சவாலாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' எனும் நோக்கானது புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட அனைத்து இலங்கையர்களினதும் வாழ்வாதாரத்தையும் நலனையும் உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. கோவிட் தொற்றுநோய் தொடங்கியவுடன், இலங்கையின் புலம்பெயர்ந்த மக்களின் நலத் தேவைகளை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை முன்டுத்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்து மட்டும் 17,861 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 40,000 இலங்கையர்களை இதுவரை இலங்கை திருப்பி அழைத்து வந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் முதல் அலையின் போது, இந்த தொழிலாளர்களின் உடனடித் தேவைகள் குறித்த அனுபவ ரீதியான தரவுகளை சேகரிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும், தகவல்களை வழங்குவதற்கும், அவசரநிலைகளின் போது உதவுவதற்குமாக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்புத் தரவுத்தளம் நிறுவப்பட்டது. மத்திய கிழக்கு, தெற்கு ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு, மலேசியா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த தரவுத்தளத்தில் தற்போது 98,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு வானில் தூக்கி உயர்த்தும் அடிப்படையில் உலர் உணவுகளை வழங்குவதற்கும், தற்காலிகத் தரிப்பிடம் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்கும், ஆர்.டி. - பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், ஜோர்தான் மற்றும் கட்டார் போன்ற நாடுகளில் கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக தொழில்களை இழந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அல்லது மாற்றுத் தொழில் வாய்ப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தும் வகையில் எமது சில தூதரகங்கள் செயற்படுத்துவதற்கும் தேவையான அவசர நிதியை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இந்த சவாலான காலங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு தற்காலிக நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்கு ஏற்கனவே சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அனைத்து நாடுகளுக்கும் எமது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்போதைய உலகளாவிய அமைப்பில், தொழில் இழப்பு மற்றும் வருமானக் குறைப்பு போன்றன உள்ளடங்கலான அதிகளவிலான சவால்களை எமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். மேலும், 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், 2020 இன் முதல் அரையாண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிச்செல்லும் பயணம் 57.2% ஆக குறைந்துள்ளதனை அவதானித்துள்ளோம். இதற்கு முன்னர் ஆண்டுதோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடிய சுமார் 200,000 இலங்கையர்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அளவிலான குறை எண்ணிக்கையாகும்.

கோவிட்-19 உலக சுகாதார அமைப்பால் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுவரை அறியப்படாத மற்றும் முன்னனுபவமில்லாத பல சவால்களை எதிர்கொள்கின்றோம். கோவிட்-19 நெருக்கடியானது பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் தொற்றுநோயின் தாக்கமானது, 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் 10 ஆண்டுகள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், வறுமையைத் தணிக்க எடுக்கப்பட்ட பல முக்கியமான நடவடிக்கைகளின் நன்மைகளையும், மற்றும் ஏனைய நிலையான வளர்ச்சி இலக்குகளையும் முன்னெடுப்பதற்கு கடுமையான தடையாக உள்ளது.

இலங்கையில் இடம்பெயர்வு வலையமைப்பை ஆரம்பிப்பதன் மூலம், இந்த சவாலான காலங்களில் எமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறந்த உதவியை வழங்குவதற்கான நடைமுறைத் தீர்வுகளை நாங்கள் கூட்டாக ஆராய்ந்து உருவாக்க முடியும். எமது புலம்பெயர்ந்தோரின் குரல்கள் செவிமடுக்கப்படுவதும், முயற்சிகளின் அனைத்து நிலைகளிலும் அவை சேர்க்கப்படுவதும் மிகவும் முக்கியமாகும்.

இலங்கை மக்களின் நன்மைகளுக்காக, இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா. வலையமைப்பு மற்றும் எமது நீண்டகால நம்பகமான பங்குதாரரான இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் நெருக்கமாக ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

நன்றி.

 

The full video is at:
https://m.youtube.com/watch?v=XAMCd4yQcYo

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close