பரிஸில் இடம்பெற்ற பல கூட்டங்களின் குறிக்கோள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதாகும்

 பரிஸில் இடம்பெற்ற பல கூட்டங்களின் குறிக்கோள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதாகும்

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் திரு. ஃபிராங்க் ரெய்ஸ்டரை பரிஸில் உள்ள வெளிநாட்டு  அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பிரான்ஸின் ஆதரவு குறித்து கலந்துரையாடினார். இரு அமைச்சர்களினதும் கலந்துரையாடலின் முடிவில் அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சர் பிரான்ஸின் வர்த்தக சபையில் பல கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆலோசகர் திரு.  பெர்னார்ட் குயின்ட் மற்றும் சர்வதேச வணிக வலையமைப்புக்களின் தலைவர் திரு. எஸ்டெல் கில்லட் ஆகியோரை அவர் வணிக சபையில் வைத்து சந்தித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, பிரான்ஸ் மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான வலையமைப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்முனைவு, வணிக முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட விடயங்களில் கல்வித் திட்டங்களுக்கான பிரான்ஸின் நிபுணத்துவம் ஆகியன தொடர்பில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.

பிரான்ஸில் உள்ள நிறுவனங்களின் மிகப்பெரிய சங்கமான எம்.ஈ.டி.ஈ.எப். இன்டர்நெஷனலின் திரு.  ஃபிராங்கோயிஸ் கார்பினுடன் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடினார்.

அவர் பரிஸில் சந்தித்த பெருநிறுவனத் துறையின் பிரதிநிதிகளில் எம் 21 லைஃப் சயன்சஸ் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் திரு. கிறிஸ்டியன் லெரோக்ஸ் மற்றும் மார்க்கடிங் ஸ்ட்ரேடஜி தேல்ஸ் டி.ஐ.எஸ். இன் உப தலைவர் திரு.  ஜீன்-கிளவுட் பெரின் ஆகியோர் உள்ளடங்குவர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 பிப்ரவரி 27

 

Please follow and like us:

Close