மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் மகாராஷ்டிர ஆளுநருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் மகாராஷ்டிர ஆளுநருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவதர் கலாநிதி. வல்சன் வேத்தோடி, அவரது மனைவி அனிதா வேத்தோடியுடன் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை 2022 பிப்ரவரி 24ஆந் திகதி மும்பையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லமான ராஜ் பவனில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். நாடுகளுக்கிடையே பகிரப்பட்ட கலாசார ஒருங்கிணைப்பை வலியுறுத்தி, சின்மயா மிஷனால் வெளியிடப்பட்ட 'இலங்கையில் ராமாயணம்' என்ற நூலை துணைத்தூதுவர் ஆளுநரிடம் கையளித்தார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, கைவினைப் பொருட்கள் கொண்ட மகாராஷ்டிர குல்ஹாடிகளின் தொகுப்பை துணைத் தூதுவதர் கலாநிதி. வேத்தோடிக்கு பரிசாக வழங்கினார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநருடனான கலந்துரையாடலின் போது இந்திய - இலங்கை உறவு மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பிரச்சினைகள் குறித்து துணைத் தூதுவர் கலந்துரையாடினார். இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் உறவின் இயக்கவியல் மற்றும் தன்மை குறித்து ஆளுநர் நன்கு அறிந்திருந்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களுடனான நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து ஊடகங்கள் உருவாக்கிய பரபரப்பையும் அறிந்து கொள்வதில் அவர் மிகவும் ஆர்வம் செலுத்தினார். மேலும், இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை மேம்படுத்துவதற்கும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை மையமாகக் கொண்டு கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் துணைத் தூதரகம்

மும்பை

2022 பிப்ரவரி 28​

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close