சென்னையில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கு சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் இரவு விருந்துபசாரமளிப்பு

சென்னையில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கு சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் இரவு விருந்துபசாரமளிப்பு

தூதரகப் படைகளுக்கு இடையே தீபாவளியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக, சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் 2022 நவம்பர் 11ஆந் திகதி சென்னையை தளமாகக் கொண்ட அனைத்து தூதரகத் தலைவர்களுக்கும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்.

தூதரகத் தலைவர்கள் தவிர, சென்னை வெளியுறவு அமைச்சின் கிளைச் செயலகத் தலைவர், சென்னையின் வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலர் மற்றும் சென்னையின் புல அலுவலகத் தலைவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஆகியோரும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர்.

அழைப்பாளர்களை வரவேற்ற பிரதி உயர்ஸ்தானிகர், சென்னையில் நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் அவர்கள் பங்கேற்றமைக்காக நன்றி தெரிவித்தார். இலங்கையின் கலாசாரம் மற்றும் உணவு வகைகளை அனுபவிப்பதற்கு அழைப்பாளர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம் என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கொக்டெய்ல் மற்றும் இலங்கை உணவு வகைகளுடன் இரவு உணவு வழங்கப்பட்டது.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 நவம்பர் 16

 

Please follow and like us:

Close