18 வயதுக்குட்பட்ட 4வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

18 வயதுக்குட்பட்ட 4வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள வீரர்களுக்கான கண்ட ரீதியான தடகளப் போட்டியான 18 வயதுக்குட்பட்ட 4வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2022, குவைத் நகரில் உள்ள அகமது அல் ரஷ்தான் டிராக் அண்ட் ஃபீல்ட் மைதானததில் 2022 அக்டோபர் 13 முதல் 16 வரை நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்பின் 4வது பதிப்பாக இடம்பெற்ற, 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பங்குபற்றிய 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 08 இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் 03 அதிகாரிகளைக் கொண்ட இலங்கைக் குழு போட்டியிட்டது.

இலங்கையைச் சேர்ந்த 08 இளம் விளையாட்டு வீரர்களில் 05 பேர் பதக்கங்களைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். தூதரக அதிகாரிகள் மற்றும் குவைத்தில் உள்ள இலங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று அவர்களை உற்சாகப்படுத்தினர்.

பெண்களுக்கான 800 மீற்றர் போட்டியில் பங்குபற்றிய கசுனி நிர்மலி 02ஆம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரவீன் ஜயதிலக்க மற்றும் அவிஷ்க தெமிந்த ஆகியோர் முறையே 02ஆம் மற்றும் 03ஆம் இடங்களைப் பெற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

ஆண்களுக்கான உயரம் பாய்தலில் டெனெத அனுஹாஸ் மற்றும் லெசந்து அர்த்தவிது ஆகியோர் முறையே 02ஆம் மற்றும் 03ஆம் இடங்களைப் பெற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

தடகள சம்மேளனத்தின் தொழில்நுட்ப பணிப்பாளர் பாலித ஜயதிலக, அணியின் பெண் செப்பரன் இமல்கா நெரஞ்சல ரணவீர மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரிஷாந்த குமார ஆகியோர் விளையாட்டு வீரர்களுடன் கலந்து கொண்டு அவர்களின் வெற்றிகரமான பங்கேற்பிற்கு உதவினர்.

இலங்கைத் தூதரகம்,

குவைத்

 

2022 நவம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close