சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் 2022 புத்தாண்டுக்கான பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்

சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் 2022 புத்தாண்டுக்கான பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்

2022 புத்தாண்டுக்கான பணிகளின் சம்பிரதாயபூர்வமான தொடக்கமானது தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானதுடன், அதனைத் தொடர்ந்து பதில் துணைத் தூதுவர் டி.எப்.எம். ஆஷிக் மற்றும் பணியாளர்களால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. எமது தாய்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களையும், ஏனையோரையும் நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூதரகப் பொதுப் பணியாளர்கள், ஆண்டு முழுவதும் உறுதியுடனும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், விசுவாசத்துடனும் மக்களுக்குத் திறமையாகவும், உற்பத்தித் திறனுடனும் சேவை செய்வதாக உறுதிமொழியை மேற்கொகொண்டு 'பொதுச் சேவைக்கான உறுதிமொழியை' ஏற்றுக்கொண்டனர்.

ஊழியர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பதில் துணைத் தூதுவர் டி.எப்.எம். ஆஷிக், கடந்த வருட நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததோடு, கோவிட்-19 தொற்றுநோயின் கடினமான காலங்களில், சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களின் நலனைக் கவனிப்பதில் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்காக, குறிப்பாக பாதிக்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், வர்த்தகம், பயணம், சுற்றுலா மற்றும் நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு வருவாயை உருவாக்கும் திறன் வாய்ந்த மனிதவளத்தை ஊக்குவிப்பதில் முக்கியமாக கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திகாக தூதரகம் ஆற்ற வேண்டிய வகிபாகத்தின் முக்கியத்துவத்தை பதில் துணைத் தூதுவர் சுட்டிக் காட்டினார். மேலும், எதிர்வரும் ஆண்டிற்கான அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையான 'நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை' யின் இலக்குகளை அடைவதில் சிறந்த பொதுச் சேவையை வழங்குவதற்காக தூதரகம் ஒரு குழுவாக, ஊழலற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பதில் துணைத் தூதுவரின் அழைப்பின் பேரில், ஜித்தாவிலுள்ள அபீர் மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் வைத்தியர். ஜெம்ஷித் அஹமத், பாதுகாப்பான பணிச்சூழலுக்கான குறிப்புக்கள், முன்னெச்சரிக்கை முறைகள் மற்றும் சமூகத்தின் மீதான பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதில் அனைவரினதும் முக்கியத்துவம் மற்றும் பொறுப்பு குறித்த சுருக்கமான உரையை நிகழ்த்தினார்.

இலங்கையின் பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய காலை உணவுடன் விழா நிறைவுற்றது.

இலங்கையின் துணைத் தூதரகம்,

ஜித்தா

2022 ஜனவரி 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close