கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதுக் குழுவிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் தலைமை

 கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதுக் குழுவிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் தலைமை

2021 ஒக்டோபர் 20-22 வரை கட்டார் நாட்டிற்கு விஜயம் செய்த இலங்கைத் தூதுக்குழுவிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவார்ட் கப்ரால் தலைமை தாங்கினார்.

கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் மாண்புமிகு ஷேக் அப்துல்லா பின் சௌத் அல்தானியைச் சந்தித்த தூதுக்குழுவினர், இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கோவிட் தொற்றுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர்கள் மீளாய்வு செய்தனர்.

கட்டார் மத்திய வங்கியுடனான சந்திப்பிற்கு மேலதிகமாக, கட்டார் தேசிய வங்கி, தோஹா வங்கி மற்றும் கட்டார் அரசின் வர்த்தக வங்கி ஆகியவற்றின் தலைவர்களைச் சந்தித்த ஆளுநர் மற்றும் தூதுக்குழுவினர், இலங்கையில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

கட்டாரில் உள்ள லுலு குழுமத்தின் பணிப்பாளர் கலாநிதி மொஹமட் அல்தாப் முஸ்லியம் வீட்டில் அவர்களுடன் ஆளுநரும் தூதுக்குழுவினரும் பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். லுலு குழுமத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

'கட்டார் - இலங்கை இருதரப்பு வாய்ப்புக்கள்' என்ற தலைப்பில் தோஹா வங்கி நடாத்திய முதலீட்டாளர் மன்றத்தில் ஆளுநர் தலைமையிலான இலங்கை மத்திய வங்கியின் தூதுக்குழுவும் பங்கேற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் கட்டார் ஆகிய இரு நாடுகளிலும் பொருளாதாரத் துறைகளில் நிலவுகின்ற புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விஜயத்திற்கும் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் தூதுக்குழுவினரின் சகல ஏற்பாடுகளுக்குமான உதவிகளை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டிருந்தது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார, பொதுக் கடன் அத்தியட்சகர் கலாநிதி எம்.இசட்.எம். அஸீம், பொருளாதார ஆய்வு அபிவிருத்திப் பணிப்பாளர் கலாநிதி சி. அமரசேகர மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர்ஃஉபசரணை திரு. நுவான் கமகே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கைத் தூதரகம்,

தோஹா

2021 அக்டோபர் 27

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close