ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

 ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) கில்லியன் ட்ரிக்ஸ் தலைமையிலான குழு, 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரனைச் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை  குறித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பில், உதவி உயர்ஸ்தானிகர் கில்லியன் ட்ரிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உதவுவதற்காக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்துப் பாராட்டினார்.

ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் இந்திரிகா ரத்வத்தே, இந்தியா மற்றும் மாலைதீவுக்கான இந்திய துணைத் தூதரகத்தின் தலைவர் ஒஸ்கார் முண்டியா, துணைத் தலைவர் கவிதா பெலானி, சென்னை கள அலுவலகத் தலைவர் சச்சிதானந்த வளன் மைக்கேல், உதவி உயர்ஸ்தானிகரின் நிர்வாக உதவியாளர் அலைஸ் எலிசபெத் கோஃப், ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஸ்தானிகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளரின் நிர்வாக உதவியாளர் வட்சரின் தை மற்றும் தூதரகத்தின் முதல் செயலாளர் (தூதரகம்) பிரசாந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

சந்திப்பின் பின்னர், பிரதி உயர்ஸ்தானிகர், ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதுக்குழுவின் உயர்ஸ்தானிகரை சான்சரி வளாகத்தில் நடைபெற்ற விசேட தூதரக முகாமுக்கு அழைத்தார். முகாமில், சிவகங்கை மாவட்டம் தலையூர், தாயமங்கலம், கூடல் நகர், திருவாதவூர், மதுரை மாவட்டம் போகநல்வேலி, ஆனையூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 244 குடியுரிமைச் சான்றிதழ்கள், 58 பிறப்புச் சான்றிதழ்கள், 4 அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டக் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டன.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 மே 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close