இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பட்டறையை பெல்ஜியத்தில் உள்ள நம்மூர் மாகாண  ஆளுநர் திறந்து வைப்பு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பட்டறையை பெல்ஜியத்தில் உள்ள நம்மூர் மாகாண  ஆளுநர் திறந்து வைப்பு

பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 அக்டோபர் 04ஆந் திகதி பெல்ஜியத்தின் நம்மூரில் சுற்றுலா ஊக்குவிப்புப் பட்டறை ஒன்றை நடாத்தியது. நம்மூர் மாகாண ஆளுநர் டெனிஸ் மாத்தன் இந்த செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், இலங்கையை மாகாணத்தில் உள்ள மக்களின் விடுமுறை இடமாக ஊக்குவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். பிரெஞ்சு மொழி  பேசும் வாலூன் பிராந்தியத்தில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வு நடாத்தப்படுவது இதுவே முதல் முறை.

சுமார் 50 சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் முகவர்கள், பயணப் பத்திரிகையாளர்கள், பயண ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி வல்லுநர்கள், பயணப் பதிவர்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துபவர்கள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெல்ஜிய சுற்றுலாத் துறையைச் சேர்ந்த தீர்மானம் மேற்கொள்பவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். உள்ளூர்  தொலைக்காட்சி அலைவரிசையான வலூன் டி.வி., இந்த நிகழ்விற்கு ஊடகச் செய்திகளை வழங்கியதுடன், இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மேலதிக செல்வாக்கைச் சேர்த்தது.

வரவேற்பு உரையை ஆற்றிய பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகப் பிரபலமாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கை, பார்வையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான இடமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். மேலும், தூதுவர் ஆசிர்வாதம், கோவிட்-19க்கு பிந்தைய நாட்டில் நிலவும் நிலைமையை விளக்கியதுடன், உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பெல்ஜியப் பயணிகளுக்கான சிறந்த இடங்களுள் ஒன்றாக  இலங்கையை அவர்களின் நாடுகளின் பட்டியலில் சேர்க்க பயண முகவர் நிறுவனங்களிலும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அண்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் கௌரவ தூதரக மோனிக் டி டெக்கர், அண்ட்ரூ தி டிராவல் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேன் காரியவாசன் மற்றும் கிளாசிக் டெஸ்டினேஷன்ஸின் ஆலோசகர் ருவான் டி அல்விஸ், இலங்கையின் பிரதான மற்றும் முக்கிய தயாரிப்புக்கள் உட்பட பல்வேறு சுற்றுலா இடங்களை மேம்படுத்துவதற்கான விளக்கக்காட்சிகளை வழங்கினர். பொதுச் சந்தையின் நிர்வாகி மைக்கேல் தி கிரேட் டிசார்னக்ஸ், இலங்கைப் பயணத் துறையில் தனது சிறந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், பெல்ஜியப் பயணிகளுக்கு விடுமுறை நாட்களில் இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான இடமாகப் பரிந்துரைத்தார். எமிரேட்ஸ் மற்றும் கத்தார் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கு அவர்கள் வழங்கும் பொருளாதார மற்றும் பயனுள்ள இணைப்பு விருப்பங்களை மேம்படுத்துவதற்காக நிகழ்வில் இணைந்தனர். இந்தப்  பட்டறை இலங்கையை பல்வேறு சிறப்புகள் மற்றும் பிரமாண்டம், கடற்கரைகள், நம்பமுடியாத அம்சங்கள் மற்றும் நிலப்பரப்புகளுடன் கூடிய ஒரு இயற்கை சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்தி, அனைவருக்குமான வாழ்நாள் பயணத் தலமாக ஊக்குவித்தது.

2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பெல்ஜியப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் 5371 பெல்ஜியப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன், இது 2018 இல் 17,519 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 க்குப் பிந்தைய சூழ்நிலையில், இலங்கைக்கு வருகை தரும் பெல்ஜிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 4,783 ஆக இருந்தது. பெல்ஜிய அரசாங்கம் 2022 செப்டம்பரில் இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்தியுள்ள நிலையில், பெல்ஜிய சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த விடுமுறை இடமாக நாட்டை விளம்பரப்படுத்த பயணத் துறை ஆர்வமாக உள்ளது. தூதரகம் 2021 ஆம் ஆண்டு முதல் பிரஸ்ஸல்ஸ், கென்ட் மற்றும் அண்ட்வெர்ப் போன்ற ஏனைய முக்கிய நகரங்களில் இதேபோன்ற சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருவதுடன், பொருளாதார இராஜதந்திரத்தின் கீழ் அதன் வருடாந்த செயற்றிட்டத்தில் நிரந்தர நடவடிக்கையாக  இதனைத் தொடருவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை தூதரகம்,

பிரஸ்ஸல்ஸ்.

2022 அக்டோபர் 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close