இட்டுகம கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு பிலிப்பைன்ஸிலிருந்து நன்கொடை

இட்டுகம கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு பிலிப்பைன்ஸிலிருந்து நன்கொடை

பிலிப்பைன்ஸில் உள்ள முன்னணித் தொழிலதிபரும் இலங்கையின் நண்பருமான திரு. வில்லியம் சென் 20,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் இலங்கை ரூபா. 4 மில்லியன்) தொகையை இட்டுகம கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகரவினால் இந்த நன்கொடை சார்ந்த வசதிகள் வழங்கப்பட்டன. இந்த பங்களிப்பானது, இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோயின் பரவலைத் தணித்தல் மற்றும் அது தொடர்பான சமூக நலத்  திட்டங்களை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆதரித்து, பலப்படுத்தும்.

பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் வசதியளிக்கப்பட்ட இந்த நன்கொடை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கையளிக்கப்பட்டது. வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் உற்பத்தி, விநியோகம் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தின் இட்டுகம நிதியத்தின் செயலாளர் திரு. ரவீந்திர விமலவீரவிடம் இந்த நன்கொடையைக் கையளித்தனர். இராஜாங்க அமைச்சின்  செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்கவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.

நன்கொடை வழங்குனரான திரு. வில்லியம் சென், ஸூம் வலைத்தளமூடாக இந் நிகழ்வில் பங்கேற்றார். திரு. வில்லியம் சென்  அவர்களின் பெருந்தன்மை மற்றும் இலங்கைக்கு நல்கி வரும் தொடர்ச்சியான உதவிகளுக்காக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண பாராட்டுக்களைத் தெரிவித்தார். தொடர்ந்தும் ஆதரவுகளை நல்குவதற்கு திரு. வில்லியம் சென் உறுதியளித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close