'வசந்தப் பயணத்திற்கான' முதல் சுற்றுலாத் தலமாக இலங்கை

‘வசந்தப் பயணத்திற்கான’ முதல் சுற்றுலாத் தலமாக இலங்கை

சீனச் சந்தையில் இலங்கையின் சுற்றுலாத் துறையைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கு இணங்க, பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், சீனப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் 2022 நவம்பர் 16ஆந் திகதி பெய்ஜிங் ஸ்பிரிங் டிரவல் சேர்வீஸ் கோ லிமிடெட் யாங் யாங்கின் பொது முகாமையாளரை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன சந்தித்தார்.

அதிகாரிகளிடமிடமிருந்தான முறையான கோரிக்கை உட்பட சீன சந்தையில் விருப்பமான இடமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான அனைத்து வழிகளையும் தூதரகம் ஆராய்ந்து வருவதாக தூதுவர் கலாநிதி கொஹொன தெரிவித்தார்.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள முதல் 10 பயண நிறுவனங்களில் பெய்ஜிங் ஸ்பிரிங் டிரவல் சேர்வீஸ் கோ லிமிடெட் ஒன்றாக இருப்பதாகவும், சீன அரசு மற்றும் பயண வர்த்தகத்தால் பலமுறை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் யாங் குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டில் ஸ்பிரிங் டிரவலின் ஆண்டு வணிக வருமானம் 24.5 பில்லியன் ரென்மின்பி (3.5 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகும். ஸ்பிரிங் எயார்லைன்ஸ் 50 பில்லியன் ரென்மின்பி பெறுமதியானது. இந் நிறுவனம் இலங்கை பயண வர்த்தகத்தில் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு பயண நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டு, தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கைக்கு தொடர்ச்சியான குழு விஜயங்களை ஏற்பாடு செய்துள்ளது. 110 விமானங்களுடன் (A320) ஸ்பிரிங் எயார்லைன்ஸ் நிறுவனமும் உள்ளது. சோங்கிங், ஷாங்காய், ஷான்டாங் மற்றும் சிச்சுவான் ஆகிய விமான நிறுவனங்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை நடாத்திய தூதுவர், சோங்கிங், செங்டு மற்றும் குன்மிங் ஆகியவற்றிலிருந்து கொழும்புடன் ஸ்பிரிங் எயார்லைன்ஸ் விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் யாங்குடன் கலந்துரையாடினார்.

பல வருங்கால பயணிகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் இப்போது புதிய இடங்களை ஆராய்ந்து வருவதால், விளம்பரங்களை மேற்கொள்ள இதுவே நேரம் என நிறுவனம் கருதுவதாக யாங் மேலும் குறிப்பிட்டார். எல்லைகள் திறக்கப்பட்டவுடன், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சீன சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாக மாறும் என்பதைத் தொடர்ந்து, தமது திட்டங்களில் இலங்கையை முன்னுரிமை இடமாக நியமிக்க நிறுவனம் ஒப்புக்கொண்டது.

தூதுவர் கலாநிதி கொஹொன மேலும் தெரிவிக்கையில், சீனச் சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தூதரகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் சீனக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் குறைந்தது ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் இலக்கை அடைய உதவுவதாகவும் தெரிவித்தார். டிசம்பர் நடுப்பகுதியில் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வில் பங்கேற்குமாறு யாங் மற்றும் ஸ்பிரிங் டிரவல் குழுவிற்கும் அவர் அழைப்பு விடுத்ததுடன், அவ்வழைப்பு குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2022 நவம்பர் 18

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close