நைஜீரியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள பணியாளர்களின் நலன்களை இலங்கை கண்காணிப்பு

 நைஜீரியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள பணியாளர்களின் நலன்களை இலங்கை கண்காணிப்பு

நைஜீரியாவிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள கென்யாவில் உள்ள  இலங்கை உயர்ஸ்தானிகராலயம், அனுமதியின்றி 2022 ஆகஸ்ட் 07ஆந் திகதி நைஜீரிய கடல்சார் சூழலுக்குள் நுழைந்ததற்காக நைஜீரிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்டி ஹீரோயிக் ஐடியூன் கப்பலில் இருந்த எட்டு இலங்கைப் பணியாளர்களின் நலனைக் கண்காணித்து வருகின்றது.

அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  வேலுப்பிள்ளை கனநாதன், நைஜீரியாவின் லாகோஸுக்குச் சென்று, தடுத்து வைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களின் நலன் மற்றும் சட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து அவர்களை விரைவாக திருப்பி அனுப்புவது குறித்து நைஜீரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமைச்சும் உயர்ஸ்தானிகராலயமும் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கும்.

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

நைரோபி

2022 நவம்பர் 18

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close