இலங்கையின் பதில் துணைத் தூதுவர் திரு டி.எப்.எம். ஆஷிக், சிங்கப்பூரின் துணைத் தூதுவர் திரு. சையத் முஹம்மது ரசிஃப் அல்ஜூனிட், மலேசியாவின் துணைத் தூதுவர் திரு. அலாவுதீன் பின் முகமது நோர், இந்தோனேசியாவின் துணைத் தூதுவர் திரு. எகோ ஹர்டோனோ, ஜப்பானின் துணைத் தூதுவர் திரு. இசுரு ஷிம்முரா, புருனேயின் துணைத் தூதுவர் திரு. பென்ஜிரான் முஹம்மது சலிமீன் பின் தாவூத், பிலிப்பைன்ஸின் துணைத் தூதுவர் திரு. எட்கர் தோமஸ் கியூ. ஆக்ஸிலியன் மற்றும் கொரியாவின் துணைத் தூதுவர் திரு. பியோங் ஜின் ஹான் ஆகியோர் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் 2021 அக்டோபர் 07ஆந் திகதி மதிய போசன சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின் போது, புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள், ஆவணங்களற்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவி, சவுதி தொழில் சட்டத்தின் அண்மைய சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றங்கள் ஆகிய விடயங்களில் பகிரப்பட்ட நலன்கள் மற்றும் பொதுவான மதிப்புக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
எதிர்காலத்தில் இந்தத் தூதரகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு துணைத் தூதுவர் ஒப்புக்கொண்டார்.
இலங்கையின் துணைத் தூதரகம்,
ஜெட்டா
2021 நவம்பர் 15