இருதரப்பு கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலந்துரையாடல்

இருதரப்பு கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலந்துரையாடல்

இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலாநிதி வினய் சஹஸ்ரபுத்தவை புதன்கிழமை (10) சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைமைப் பணிப்பாளர் தூதுவர் தினேஷ் கே. பட்நாயக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

 

1950 இல் நிறுவப்பட்ட இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவை, இந்திய அரசாங்கத்தின் ஒரு தன்னாட்சி அமைப்பாவதுடன், இது ஏனைய நாடுகள் மற்றும் அவற்றின் மக்களுடன் கலாச்சாரப் பரிமாற்றத்தின் மூலம் இந்தியாவின் வெளிப்புறக் கலாச்சார உறவுகளில் ஈடுபட்டுள்ளது. பல ஆண்டுகளாக, பல்வேறு கல்விப் பிரிவுகளிலான இந்திய கலாச்சார உறவுகளுக்கான புலமைப்பரிசில்களின் மூலம் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் இளமாணி மற்றும் முதுமாணிக் கற்கைகளைத் தொடர்வதற்காக இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவை இலங்கைக்கு ஆண்டுதோறும் சுமார் 200 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது.

உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவர் கலாநிதி சஹஸ்ரபுத்தே ஆகியோருக்கு இடையிலான இந்தக் கலந்துரையாடலின் போது, இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையினால் இலங்கைகு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் அடுத்த ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் முதலாவது இலங்கைக்கான விஜயத்தின் நூற்றாண்டு விழாவை கூட்டாக கொண்டாடுதல் ஆகியன குறித்து கவனம் செலுத்தியது. இலங்கையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திறன்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவரிடம் உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்தார்.

 

'இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த மூலோபாயம் 2021/2023' என்ற தனது கொள்கை வரைபடத்தின் பிரதியையும், அநாகரிக தர்மபாலவினால் எழுதப்பட்டு, ஹசர தசுனி ஹிரிமுத்துகோடாவால் மொழிபெயர்க்கப்பட்ட 'புத்த கயாவில் உள்ள மகாபோதி விகாரையின் வரலாறு' என்ற சிறிய புத்தகத்தின் ஹிந்திப் பதிப்பின் பிரதியையும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் தலைவருக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட கையளித்தார். இந்த சந்திப்பில் உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் (நிர்வாகம்) உபுல் புஸ்பகுமார உயர்ஸ்தானிகருடன் இணைந்திருந்தார்.

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது டில்லி

2021 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close