பொட்ஸ்வானா குடியரசின் ஜனாதிபதியிடம் உயர்ஸ்தானிகர் அமரசேகர நற்சான்றிதழ்களை கையளிப்பு

 பொட்ஸ்வானா குடியரசின் ஜனாதிபதியிடம் உயர்ஸ்தானிகர் அமரசேகர நற்சான்றிதழ்களை கையளிப்பு

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர, பொட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனில்  உள்ள பொட்ஸ்வானாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக, பொட்ஸ்வானா குடியரசின் ஜனாதிபதி கலாநிதி மொக்வீட்ஸி எரிக் கீபெட்ஸ்வே மசிசியிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார். தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அங்கீகாரம் பெற்ற 9 நாடுகளில் பொட்ஸ்வானாவும் ஒன்றாவதுடன், இலங்கை வல்லுநர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.

விழாவில், பொட்ஸ்வானாவின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி. லெமோங்காங் குவாப்பா பொட்ஸ்வானாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் (நியமிக்கப்பட்ட) சிறிசேன அமரசேகரவை பொட்ஸ்வானா ஜனாதிபதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களை பொட்ஸ்வானா ஜனாதிபதியிடம் உயர்ஸ்தானிகர் அமரசேகர தெரிவித்தார்.

நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்ததன் பின்னர், பொட்ஸ்வானாவின் ஜனாதிபதி புதிய உயர்ஸ்தானிகருடன் சுமார் 20 நிமிடங்கள் மிகவும் இனிமையான மற்றும் அன்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இச்சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதி தனது வெளியுறவுக் கொள்கையில் ஆபிரிக்க பிராந்தியத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கைக்கும் பொட்ஸ்வானாவிற்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். நட்பு நாடாக பொது மன்றங்களில் இலங்கையின் நீண்டகால ஜனநாயக அமைப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் பொட்ஸ்வானாவின் அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான சமூகப் பொருளாதார மற்றும் கலாசார உறவை மேம்படுத்துவதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு புதிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உயர்ஸ்தானிகர் அமரசேகர அரச துறையில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அனுபவமுள்ள ஒரு சிரேஷ்ட அரச ஊழியர் ஆவார். 1970ஆம் ஆண்டு திட்டமிடல் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இணைந்து கொண்ட இவர், 20 வருடங்களுக்கு மேலாக பிரதமரின் செயலாளர் உட்பட பல அமைச்சுக்களின் செயலாளராக 2 தடவைகள் கடமையாற்றியதோடு, தென்னாரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பதவியேற்கும் முன்னர் அமைச்சரவையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். உயர்ஸ்தானிகர் அமரசேகர அவரது பாரியார் ஹேமா அமரசேகர மற்றும் அமைச்சர் ஆலோசகர் பிரியங்கனி ஹேவாரத்ன ஆகியோருடன் நற்சான்றிதழ் கையளிக்குட் வைபவத்தில் பங்கேற்றார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

பிரிட்டோரியா

2021 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close