தூதரகத்தால் அங்காராவில் முதன்முறையாக இலங்கைத் திரைப்படம் திரையிடல்

தூதரகத்தால் அங்காராவில் முதன்முறையாக இலங்கைத் திரைப்படம் திரையிடல்

தூதரகத்தின் வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் துருக்கியின் சினிமா இயக்குநரகத்துடன் இணைந்து, அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், 'விஷமா பாக – தி அதர் ஹாஃப்' என்ற விருது  பெற்ற இலங்கைத் திரைப்படத்தை நவம்பர் 30ஆந் திகதி அங்காராவில் உள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சின் சினிமா இயக்குனரக ஜெனரலின் வரலாற்றுத் திரைப்பட சலூனில் திரையிட்டது.

இராஜதந்திர நிறுவனம், கல்வியியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அங்காராவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த  மாணவர்கள், துருக்கியில் உள்ள இலங்கை சமூகம் மற்றும் ஏனைய தூதரக அதிகாரிகள் இந்தத் திரைப்படத்தை ரசித்தனர். விருந்தினர்களுக்கு இலங்கை சிற்றுண்டிகள் மற்றும் சிலோன் தேநீர் வழங்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2021 டிசம்பர் 0​9

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close