தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு 2022 ஒக்டோபர் 07ஆந் திகதி நிறைவடையவுள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலான A/HRC/51/L.1 என்ற வரைவுத் தீர்மானத்திற்கு 2022 அக்டோபர் 06ஆந் திகதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சபையின் 51வது கூட்டத்தொடரின் இறுதிப் பகுதிக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் இணையவுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 அக்டோபர் 03
Please follow and like us: