இலங்கைக்கு வருகை தருவதற்கு பங்களாதேஷ் பயணிகள் ஆர்வம்

இலங்கைக்கு வருகை தருவதற்கு பங்களாதேஷ் பயணிகள் ஆர்வம்

2022 செப்டம்பர் 29-30 மற்றும் அக்டோபர் 01ஆந் திகதிகளில் டாக்காவில் உள்ள சர்வதேச மாநாட்டு நகரமான பசுந்தராவில் நடைபெற்ற 9வது ஆசிய சுற்றுலாக் கண்காட்சியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுடன் இணைந்து பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பங்கேற்றது. பங்களாதேஷின் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பங்களாதேஷ் பர்ஜதன் கூட்டுத்தாபனம், பங்களாதேஷ் சுற்றுலா சபை மற்றும் சுற்றுலா இதழான பர்ஜதன் பிசித்ரா ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மூன்று நாள் சுற்றுலாக் கண்காட்சியின் போது, 1,000க்கும் மேற்பட்ட பங்களாதேஷ்  சுற்றுலா செயற்படுத்துனர்கள், பயண முகவர்கள், தனிப்பட்ட பயணிகள் மற்றும் மாணவர்கள் இலங்கை விளம்பரச் சாவடியை பார்வையிட்டனர். பிராந்தியத்தில் பல நாடுகள் எதிர்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் இரண்டு வருடங்களின் பின்னர் பார்வையாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான ஆர்வமத்தை வெளிப்படுத்தினர்.

அக்டோபர் 29ஆந் திகதி ஆரம்ப தொடக்கத்தில் இலங்கை நடன நிகழ்ச்சிகளின் சிறப்புக் கலாச்சார மாலை வைபவத்துக்கு உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தது. பங்களாதேஷில்  உள்ள இலங்கை நடனப் பாடசாலை மாணவியொருவர் பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தினார்.

பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கைக்கான விசேட விமானக்  கட்டணத்தை ஊக்குவித்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மூன்று நாள் கண்காட்சியின் போது ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் நடாத்தப்பட்ட போட்டியின் அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு கொழும்பு சென்று திரும்புவதற்கான மூன்று விமான டிக்கெட்டுக்களை வழங்கியது.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பயணம் மற்றும் கூட்டங்களுக்கு  விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக பிற்போடப்பட்டிருந்த ஆசிய சுற்றுலாக் கண்காட்சி 2022, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

2022 அக்டோபர் 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close