பிரதமர் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மோடிக்கு இடையிலான மெய்நிகர் மாநாடு செப்டம்பர் 26ஆந் திகதி இடம்பெறவுள்ளது

பிரதமர் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மோடிக்கு இடையிலான மெய்நிகர் மாநாடு செப்டம்பர் 26ஆந் திகதி இடம்பெறவுள்ளது

இலங்கை மற்றும் இந்தியாவின் பிரதமர்களுக்கிடையில் 2020 செப்டம்பர் 26 சனிக்கிழமையன்று இருதரப்பு மெய்நிகர் மாநாடொன்று இடம்பெறவுள்ளது.

2020 ஆகஸ்ட் 06 ஆந் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியின் விளைவாக, குறித்த மெய்நிகர் மாநாட்டின் மூலமாக பன்முக இருதரப்பு உறவை மறுபரிசீலனை செய்து கொள்வதற்கு இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அரசியல், பொருளாதாரம், நிதி, அபிவிருத்தி, காவல் மற்றும் பாதுகாப்புத் துறைகள், கல்வி, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பரஸ்பரம் ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் ஆகியன தொடர்பில் இந்த இருதரப்புக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் இரு நாடுகளினதும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டின் போது தலைவர்களுடன் இணைந்திருப்பர்.

கடந்த மாதம் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் ஈடுபடும் முதாவது மெய்நிகர் மாநாடு இதுவாகும்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 

23 செப்டம்பர் 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close
Zoom